கர்நாடக மாநில தொல்லியல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கர்நாடக மாநில தொல்லியல் துறை என்பது கர்நாடக அரசின் ஒரு துறையாகும்.இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பாரம்பரிய தளங்களை தொல்பொருள் ஆய்வு செய்து பராமரிப்பு மற்றும் மேற்பார்வை செய்வது இத்துறையின் பணிகளாகும்.

வரலாறு[தொகு]

மைசூர் சமஸ்தானத்தில் 1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக பி.லூயிஸ் ரைஸ் இருந்தார். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில், கர்நாடகாவின் மைசூர் கல்வெட்டுகளில் இருந்த தகவல்களை கல்லெழுத்துவியல் புத்தகமாக்கி பல தொகுதிகளாக வெளியிட்டது.[1]

நோக்கங்கள்[தொகு]

  • வரலாறு, கட்டடக்கலை, சுற்றுச்சூழல் மற்றும் சுற்று சூழல் மதிப்பீடுகளின் அடிப்படையில் பாரம்பரிய கட்டிடங்கள் பகுதிகளை கண்டறிந்து தரப்படுத்தல்.
  • பொது‌த் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்புடன் பாரம்பரிய பாதுகாப்பு திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்துதல்.
  • பாரம்பரிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட விதிகள், தேவைப்பட்டால் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் அரசுக்கு முன்மொழிதல்.[1]

பணிகள்[தொகு]

தொல்பொருள் அகழ்வாராய்ச்சி, நினைவுச்சின்னங்கள்ப பாதுகாப்பு, கல்வெட்டியல்,நாணயவியல்,தொல்பொருள் வெளியீடுகள்,அருங்காட்சியகங்கள் அமைத்தல்,தொல்பொருள் பதிவு, பொது தனியார் பங்கேற்புடன் பாதுகாத்தல், கருத்தரங்குகள், கண்காட்சிகள், பட்டறைகள் அமைத்தல் ஆகிய பணிகளை இத்துறை மேற்கொள்ளுகிறது.[1]

கர்நாடக மாநிலத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள்[தொகு]

பாரம்பரிய கர்நாடக மாநில நினைவுச் சின்னங்கள் பின்வருமாறு:.[2]

மண்டலங்கள் மாநில தொல்லியல் துறை கட்டுப்பாடு இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாடு மொத்தம்
பெங்களூர் 90 153
மைசூர் 110 71 181
பெல்காம் 356 311 667
குல்பர்கா 196 163 359
மொத்தம் 752 608 1360


இணையதளம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Cumming, John (1939). Revealing India`s Past: A Record Of Archaeological Conservation And Exploration In India And Beyond. Genesis Publishing Ltd. பக். 297. 
  1. 1.0 1.1 1.2 "Evolution of Archaeology". கர்நாடக மாநில தொல்லியல் துறை இணையத்தளம். http://www.karnatakaarchaeology.gov.in/About%20Us.html. 
  2. "Monuments in karnataka". கர்நாடக மாநில தொல்லியல் துறை இணையத்தளம். http://www.karnatakaarchaeology.gov.in/History.html.