கர்நாடக மாநில தொல்லியல் துறை
கர்நாடக மாநில தொல்லியல் துறை என்பது கர்நாடக அரசின் ஒரு துறையாகும்.இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பாரம்பரிய தளங்களை தொல்பொருள் ஆய்வு செய்து பராமரிப்பு மற்றும் மேற்பார்வை செய்வது இத்துறையின் பணிகளாகும்.
வரலாறு[தொகு]
மைசூர் சமஸ்தானத்தில் 1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக பி.லூயிஸ் ரைஸ் இருந்தார். 19 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில், கர்நாடகாவின் மைசூர் கல்வெட்டுகளில் இருந்த தகவல்களை கல்லெழுத்துவியல் புத்தகமாக்கி பல தொகுதிகளாக வெளியிட்டது.[1]
நோக்கங்கள்[தொகு]
- வரலாறு, கட்டடக்கலை, சுற்றுச்சூழல் மற்றும் சுற்று சூழல் மதிப்பீடுகளின் அடிப்படையில் பாரம்பரிய கட்டிடங்கள் பகுதிகளை கண்டறிந்து தரப்படுத்தல்.
- பொதுத் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்புடன் பாரம்பரிய பாதுகாப்பு திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்துதல்.
- பாரம்பரிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட விதிகள், தேவைப்பட்டால் கட்டுப்பாடுகள் மற்றும் விதிகள் அரசுக்கு முன்மொழிதல்.[1]
பணிகள்[தொகு]
தொல்பொருள் அகழ்வாராய்ச்சி, நினைவுச்சின்னங்கள்ப பாதுகாப்பு, கல்வெட்டியல்,நாணயவியல்,தொல்பொருள் வெளியீடுகள்,அருங்காட்சியகங்கள் அமைத்தல்,தொல்பொருள் பதிவு, பொது தனியார் பங்கேற்புடன் பாதுகாத்தல், கருத்தரங்குகள், கண்காட்சிகள், பட்டறைகள் அமைத்தல் ஆகிய பணிகளை இத்துறை மேற்கொள்ளுகிறது.[1]
கர்நாடக மாநிலத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள்[தொகு]
பாரம்பரிய கர்நாடக மாநில நினைவுச் சின்னங்கள் பின்வருமாறு:.[2]
மண்டலங்கள் | மாநில தொல்லியல் துறை கட்டுப்பாடு | இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாடு | மொத்தம் | |
---|---|---|---|---|
பெங்களூர் | 90 | 153 | ||
மைசூர் | 110 | 71 | 181 | |
பெல்காம் | 356 | 311 | 667 | |
குல்பர்கா | 196 | 163 | 359 | |
மொத்தம் | 752 | 608 | 1360 |
இணையதளம்[தொகு]
- கர்நாடக மாநில தொல்லியல் துறை இணையத்தளம் பரணிடப்பட்டது 2016-10-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்[தொகு]
- Cumming, John (1939). Revealing India`s Past: A Record Of Archaeological Conservation And Exploration In India And Beyond. Genesis Publishing Ltd. பக். 297.
- ↑ 1.0 1.1 1.2 "Evolution of Archaeology". கர்நாடக மாநில தொல்லியல் துறை இணையத்தளம் இம் மூலத்தில் இருந்து 2016-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161028212234/http://www.karnatakaarchaeology.gov.in/About%20Us.html.
- ↑ "Monuments in karnataka". கர்நாடக மாநில தொல்லியல் துறை இணையத்தளம் இம் மூலத்தில் இருந்து 2016-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161028212307/http://www.karnatakaarchaeology.gov.in/History.html.