சிவசுவதி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சிவசுவதி | |
---|---|
சாதவாகன ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 2ம் நூற்றாண்டு |
முன்னையவர் | சாதகர்ணி |
பின்னையவர் | கௌதமிபுத்ர சதகர்ணி |
குழந்தைகளின் பெயர்கள் | கௌதமிபுத்ர சதகர்ணி |
அரசமரபு | சாதவாகனர் |
சாதவாகனப் பேரரசு பொ.ஊ.மு. 100–பொ.ஊ. 2ம் நூற்றாண்டு | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||
சிவசுவதி என்பவர் கி.பி 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகன மன்னராவார். இவர் பிரம்மாண்ட புராணம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் 28 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.[1][2]
சிவசுவதியின் ஆட்சிக்காலத்திலேயே மேற்குச் சத்ரபர்கள் வடக்கு மகாராட்டிரம் மற்றும் விதர்ப்பம் மீது படையெடுத்திருக்கக் கூடும். சத்ரபர்கள் புனே மற்றும் நாசிக் மாவட்டங்களைக் கைப்பற்றியதோடு, சாதவாகனர்கள் தமது தலைநகரான சுன்னாரைக் கைவிட்டு ஔரங்கபாத்துக்கு அண்மையிலுள்ள பிரதித்தானத்துக்கு (தற்காலப் பைத்தான்) தமது தலைநகரை மாற்றும்படியும் செய்தனர்.[1]
நாசிக் குகைக் கல்வெட்டுக்களில், குகை இல. 3ஐ அளித்தவராகவும், கௌதமிபுத்ர சதகர்ணியின் தாயாகவும் விளங்கிய கௌதமி பாலசிறீ என்பவரே இவரது அரசியாக இருக்கக்கூடும்.[3]
சிவசுவதி, புகழ்பெற்ற கௌதமிபுத்ர சதகர்ணியின் தந்தையாக இருக்கக்கூடும். நாசிக் குகைக் கல்வெட்டுகளில் இவர், "சகர்கள், யவனர்கள் மற்றும் பகலவர்களை அழித்து, காகரத இனத்தை வேரறுத்து, சாதவாகனக் குடும்பத்தின் பெருமையை மீள நிலைநிறுத்திய"வராகக் கூறப்படுகிறார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]மூல நூல்கள்
[தொகு]Rao (1994), History and Culture of Andhra Pradesh: from The Earliest Times To the Present Day, Sterling Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-207-1719-8