நிர்மல் மாவட்டம்
நிர்மல் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | 2016 |
தலைமையிடம் | நிர்மல் |
மண்டல்கள் | 19 |
அரசு | |
• மக்களவை தொகுதி | அதிலாபாத் |
• சட்டமன்றத் தொகுதிகள் | நிர்மல், கானாப்பூர், முத்தோல் |
பரப்பளவு | |
• Total | 3,845 km2 (1,485 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 7,09,418 |
• அடர்த்தி | 180/km2 (480/sq mi) |
Demographics | |
• எழுத்தறிவு | 57.77 % |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–18[1] |
இணையதளம் | nirmal |
நிர்மல் மாவட்டம் (Nirmal district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2][3]தெலங்கானா மாநிலத்தின் வடக்குப் பகுதி மாவட்டமான ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் மற்றும் பைன்சா பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நிர்மல் நகரம் ஆகும்.
புவியியல்
[தொகு]தக்கான பீடபூமியில், கோதாவரி ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த நிர்மல் மாவட்டம் 3,845 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [4] இம்மாவட்டத்தின் வடக்கில் ஆதிலாபாத் மாவட்டம், வடகிழக்கில் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம், கிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் ஜக்டியால் மாவட்டம் மற்றும் நிசாமாபாத் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3,845 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிர்மல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,09,418 ஆகும்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1046 பெண்கள் வீதம் உள்ளனர். 78% மக்கள் ஊரகப்பகுதியில் வாழ்கின்றனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 185 நபர்கள் வீதம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]நிர்மல் மாவட்டம், நிர்மல் மற்றும் பைன்சா என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டது. இவ்விரண்டு வருவாய் கோட்டத்தில் 19 வருவாய் வட்டங்கள் உள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவராக இளம்பாரதி உள்ளார்.[6]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016 இம் மூலத்தில் இருந்து 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011142157/https://timesalert.com/telangana-new-districts-list/21462/.
- ↑ "Nirmal district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 4.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.