உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திபேட்டை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
சித்திபேட்டை மாவட்டத்தின் மூன்று வருவாய் கோட்டங்கள்

சித்திபேட்டை மாவட்டம் (Siddipet district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] மேடக் மாவட்டம், கரீம்நகர் மாவட்டம் மற்றும் வாரங்கல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.

இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சித்திபேட்டை நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–36 ஆகும்.[2]

மாவட்ட எல்லைகள்

[தொகு]

சித்திபேட்டை மாவட்டம், கரீம்நகர் மாவட்டம், மேடக் மாவட்டம், வாரங்கல் கிராமபுற மாவட்டம், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், காமாரெட்டி மாவட்டம், யதாத்ரி புவனகிரி மாவட்டம் மற்றும் ராஜன்னா சிர்சில்லா மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டது.

மக்கள் தொகையியல்

[தொகு]

3425.19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சித்திபேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 10,65,127 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள் தொகை 38.50% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 8405% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 277 நபர்கள் வீதம் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 5.54% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 1,07,962 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.75% ஆகவும், ஆண்களின் எழுத்தறிவு 67.70% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 47.87%ஆக உள்ளது. பட்டியல் சமூக மக்கள் தொகை 1,44,952 ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 1,48,162 ஆகவும் உள்ளது.[3]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

சித்திபேட்டை மாவட்டம் கஜ்வெல், சித்திபேட்டை மற்றும் உஸ்னாபாத் என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [4][1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் வெங்கடரமண ரெட்டி ஆவார்.[5]

வருவாய் வட்டங்கள்/மண்டல்கள்

[தொகு]
சித்திபேட்டை வருவாய் கோட்டம் கஜ்வெல் வருவாய் கோட்டம் உஸ்னாபாத் வருவாய் கோட்டம்
சித்திபேட்டை (நகர்புறம்) கஜ்வெல் உஸ்னாபாத்
சித்திபேட்டை (கிராமப்புறம்) ஜெகதேவ்பூர் அக்கண்ணாபேட்டை
நாங்கூர் கொண்டபாக் கொகிதா
சின்னகோடூர் முலுக் பெஜ்ஜங்கி
தொகுதா மர்கூக் மட்டூர்
தௌல்தாபாத் வர்கல்
மீர்தோட்டி ராய்போல்
துப்பாக்
செரியல்
குமாரவள்ளி

கல்வி

[தொகு]

இம்மாவட்டத்தில் 1375 பள்ளிகளும், 74 இளையோர் கல்லூரிகளும், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 9 தொழில் நுட்பம் & பொறியியல் கல்லூரிகளும், 3 பாலிடெக்னிக் நிறுவனங்களும் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Siddipet district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
  2. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  3. SIDDIPET DISTRICT PROFILE
  4. Name of the Mandals and Villages in Siddipet District
  5. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திபேட்டை_மாவட்டம்&oldid=3697462" இலிருந்து மீள்விக்கப்பட்டது