வாரங்கல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாரங்கல் நகர மாவட்டம்
தெலங்காணாவின் மாவட்டம்
வாரங்கல் கோட்டையில் காணப்படும் யானை சிலைகள்
வாரங்கல் கோட்டையில் காணப்படும் யானை சிலைகள்
தெலங்காணாவில் வாரங்கல் மாவட்டத்தின் அமைவிடம்
தெலங்காணாவில் வாரங்கல் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
தலைமையிடம்வாரங்கல்
வட்டங்கள்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்இராசீவ்காந்தி. அனுமந்து
 • மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிகள்தெலங்காணா சட்டப் பேரவை
பரப்பளவு
 • மொத்தம்1,304.50 km2 (503.67 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,35,707
 • அடர்த்தி870/km2 (2,300/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
வாகனப் பதிவுடிஎஸ்–03[1][2]
இணையதளம்warangalurban.telangana.gov.in

வாரங்கல் நகர மாவட்டம் (Warangal Urban district) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். மாவட்ட தலைமையகம் அனம்கொண்டாவில் அமைந்துள்ளது. [3]

வரலாறு[தொகு]

வாரங்கல் மாவட்டம் 1905 முதல் 1953 வரை
1979 வரை வாரங்கல் மாவட்டம்

வாரங்கல் கிராமப்புற மாவட்டம் பல வரலாற்றுக்கு முந்தைய வாழ்விடங்களை கொண்டிருந்தது. அவை இந்திய தொல்பொருள் அதிகாரிகளால் ஆராயப்பட்டன. பழைய கற்காலப் பாறை ஓவியங்கள் பந்துவலா கட்டா என்ற இடத்தில் காணப்படுகின்றன [4]

சமண தீர்த்தங்கரருக்கு சிலையுள்ள பத்மாட்சி குட்டா அல்லது கடலாலய பசாதி என்பது அனமகொண்டா நகரின் மையத்தில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ள பத்மாவதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பத்மாட்சி ஆலயத்தில் அமைந்துள்ளது. இது முதலில் காக்கத்தியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. [5] உருவங்கள் அனைத்தும் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவை. தற்போது மீட்டெடுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. [6]

காக்கத்தியர்கள் பல நினைவுச்சின்னங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் சுவாரஸ்யமான கோட்டை, நான்கு பிரம்மாண்டமான கல் நுழைவாயில்கள், சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுயம்பு கோயில், இராமப்பா ஏரிக்கு அருகில் அமைந்துள்ள இராமப்பா கோயில் போன்றவை. முக்கிய ஆட்சியாளர்களில் கணபதி தேவன், பிரதாப உருத்திரன், உருத்திரமாதேவி ஆகியோர் அடங்குவர். பிரதாப உருத்திரனின் தோல்விக்குப் பிறகு, முசுனூரி நாயக்கர்கள் 72 நாயக்க தலைவர்களை ஒன்றிணைத்து, தில்லி சுல்தானகத்திடமிருந்து வாரங்கலைக் கைப்பற்றி ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். நாயக்கர்களிடையே ஏற்பட்ட பொறாமையும், போட்டியும் இறுதியில் 1370 இல் இந்துக்களின் வீழ்ச்சிக்கும் பாமினி சுல்தானகத்தின் எழுச்சிக்கும் வழிவகுத்தது.

பாமினி சுல்தானகம் பின்னர் பல சிறிய சுல்தான்களாக பிரிந்தது. அவற்றில் கோல்கொண்டா சுல்தானகம் வாரங்கலை ஆண்டது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்1687இல் கோல்கொண்டாவைக் கைப்பற்றினார். மேலும் 1724 ஆம் ஆண்டில் தெலங்காணா, மகாராட்டிரா, கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய பேரரசின் தெற்கு மாகாணங்கள் பிரிந்து ஐதராபாத் மாநிலமாக மாறும் வரை இது முகலாய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. ஐதராபாத் 1948 இல் இந்திய மாநிலமாக மாறியது. 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகப் பிரிக்கப்பட்டது. வாரங்கலை உள்ளடக்கிய ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பிராந்தியமான தெலங்காணா ஆந்திராவின் ஒரு பகுதியாக மாறியது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர், இந்த மாவட்டம் தெலங்காணா மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

மாவட்ட உருவாக்கம்[தொகு]

பிரிக்கப்படாத வாரங்கல் மாவட்டம் 1 அக்டோபர் 1953 முதல் 10 அக்டோபர் 2016 வரை

ஐதராபாத்தின் நிசாமின் ஆட்சியின் போது , ஐதராபாத் மாநிலம் பல சிறிய வட்டங்களில் பிரிக்கப்பட்டது. 1800களின் முற்பகுதியில் வாரங்கல் ஒரு சர்க்காராக உருவாக்கப்பட்டது. [7] 1866 ஆம் ஆண்டில் சர்க்கார்கள் ஒழிக்கப்பட்டு மாவட்டங்களை உருவாக்க ஒன்றிணைக்கப்பட்டன. வாரங்கல், [8] கும்மேட்டு [9] , போங்கீர் வட்டங்களின் ஒரு பகுதியை இணைப்பதன் மூலம் வாரங்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. போங்கிர் சர்க்காரிலிருந்து ஜங்காவ்ன் பகுதி வாரங்கலுக்கும், வாரங்கலின் கமல்பூர் பகுதிக்கும் கரீம்நகர மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் ஐதராபாத் துணை மாநிலம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டபோது 1. அவுரங்காபாத் பிரிவு, 2. குல்பர்கா பிரிவு, 3. குல்சனாபாத் பிரிவு, 4. வாரங்கல் பிரிவு என ஆனது. [10] கி.பி 1905 ஆம் ஆண்டில், வாரங்கல் மாவட்டம் வாரங்கல், பக்காலா, கம்மம், யெல்லண்டு, மகாபூபாபாத், மதிரா, பல்வஞ்சா வட்டங்ககள் மற்றும் பழைய பால்வஞ்சா சன்ஸ்தான் மற்றும் சில ஜாகீர்களுடன் உருவாக்கப்பட்டது. ஐதராபாத் மாநிலத்தின் பல மாவட்டங்களை விட இது பெரியதாக இருந்தது. [11]

நிலவியல்[தொகு]

வாரங்கல் மாவட்டம் 1,304.50 சதுர கிலோமீட்டர் (503.67 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது .

புள்ளிவிவரம்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தில் 1,135,707 மக்கள் தொகை உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு வாரங்கலை நாட்டின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக (மொத்தம் 640 இல் ) பெயரிட்டது. தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் ஆந்திராவின் பதின்மூன்று மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [12]

கலாச்சாரம்[தொகு]

பிப்ரவரி 2013 இல், வாரங்கலுக்கு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய நகர தகுதி வழங்கப்பட்டது. [13] ஒரு சில சுற்றுலா தலங்கள் பின்வருமாறு:

ருத்திரமாதேவி, கலோஜி நாராயண ராவ், கோத்தப்பள்ளி ஜெயசங்கர், நெரெல்லா வேணுமாதவ், பி. வி. நரசிம்ம ராவ் ஆகியோர் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள் ஆவர்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Warangal district
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரங்கல்_மாவட்டம்&oldid=3098938" இருந்து மீள்விக்கப்பட்டது