ஆதிலாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்


ஆதிலாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஆதிலாபாத் நகரில் உள்ளது. 16,128 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,488,003 மக்கள் வாழ்கிறார்கள். பிரிப்புக்குப் பிறகு இம்மாவட்டம் தெலுங்கானா மாநிலத்தில் அமையும். புகழ்பெற்ற ஸ்ரீ ஞான ஸரஸ்வதி அம்மன் திருக்கோவில் இம்மாவட்டத்தின் பாஸர் என்ற கிராமத்தில் உள்ளது. ஆந்திரத்தின் காகிதபுரம் இம்மாவட்டத்தில் உள்ள ஸிர்புரில் அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் நிர்மல், அசிபாபாத் மற்றும் மஞ்செரியல் வருவாய் கோட்டங்களை, அக்டோபர், 2016-இல் நிர்மல் மாவட்டம், மஞ்செரியல் மாவட்டம் மற்றும் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்களாக நிறுவப்பட்டது. [1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஆதிலாபாத் மாவட்டம் ஆதிலாபாத் மற்றும் உத்நூர் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டது. [2]

வ. எண் ஆதிலாபாத் வருவாய் கோட்டம் உத்நூர் வருவாய் கோட்டம்
1 ஆதிலாபாத் (நகர்புறம்) இந்தர்வெள்ளி
2 ஆதிலாபாத் (கிராமப்புறம்) நார்னூர்
3 மாவலா கடிகுடா
4 குடியாத்தனூர் உத்நூர்
5 பஜார்‌ஹத்னூர்‌
6 பேலா
7 போத்
8 ஜெயின்நாத்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்
  2. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". பார்த்த நாள் 8 October 2016.

வெளியிணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிலாபாத்_மாவட்டம்&oldid=2643114" இருந்து மீள்விக்கப்பட்டது