கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம்
கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர் 2016 |
தலைமையிடம் | கொமாரம் பீம் |
மண்டல்கள் | 15 |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | அதிலாபாத் |
• சட்டமன்றத் தொகுதிகள் | அசிபாபாத் மற்றும் சிர்புர் |
பரப்பளவு | |
• Total | 4,878 km2 (1,883 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 5,15,812 |
• அடர்த்தி | 110/km2 (270/sq mi) |
• நகர்ப்புறம் | 86,984 (16.86%) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS 20 |
முதன்மைச் சாலைகள் | NH 63[1] |
இணையதளம் | asifabad |
கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் (Komaram Bheem Asifabad district), இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். இப்புதிய மாவட்டம் அக்டோபர் 2016-இல் துவக்கப்பட்டது.[2] இதன் தலைமையிட நகரம் கொமாரம் பீம் ஆகும். இம்மாவட்டம் ஆதிலாபாத் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாகத் துவக்கப்பட்டது. [3]
புவியியல்
[தொகு]கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டம் மற்றும் கட்சிரோலி மாவட்டங்களும், தெற்கில் மஞ்செரியல் மாவட்டமும், மேற்கில் ஆதிலாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் பெஜ்ஜூர் மற்றும் சிர்பூர் காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலிகள் காணபபடுகிறது.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 5,15,835 ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் அசிபாபாத் மற்றும் ககாஸ்நகர் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 15 வருவாய் வட்டங்களையும்[4] கொண்டுள்ளது.
வருவாய் வட்டங்கள்
[தொகு]வ. எண் | கொமாரம் பீம் அசிபாபாத் வருவாய்க் கோட்டம் | காகஸ்நகர் வருவாய்க் கோட்டம் |
---|---|---|
1 | சிர்பூர் (நகர்புறம்) | பெஜ்ஜூர் |
2 | லிங்காப்பூர் | பெஞ்சிசல்பேட்டை |
3 | ஜெய்னூர் | காகஸ்நகர் |
4 | திர்யாணி | கௌதலா |
5 | கொமாரம் பீம் அசிபாபாத் | சிந்தலமனப்பள்ளி |
6 | கேரமேரி | தகிகோன் |
7 | வண்கிடி | டி. சிர்பூர் |
8 | ரெப்பினா |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/.
- ↑ "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016.
- ↑ "Komaram Bheem Asifabad district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "Clipping of Andhra Jyothy Telugu Daily – Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.