ஜன்கோன் மாவட்டம்
ஜன்கோன் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் ஜன்கோன் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்கானா |
நிறுவிய ஆண்டு | அக்டோபர், 2016 |
தலைமையிடம் | ஜன்கோன் |
மண்டல்கள் | 13 |
அரசு | |
• சட்டமன்றத் தொகுதிகள் | 3 |
பரப்பளவு | |
• மாவட்டம் | 2,188 km2 (845 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மாவட்டம் | 5,66,376 |
• அடர்த்தி | 260/km2 (670/sq mi) |
• நகர்ப்புறம் | 12.6% |
Demographics | |
• எழுத்தறிவு | 61.4% |
• பாலின விகிதம் | 997 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TS–27[1] |
முதன்மைச் சாலை | தேசிய நெடுஞ்சாலை எண் 163 |
ஆண்டு சராசரி மழைப்பொழிவு | 788 mm |
இணையதளம் | jangaon |
சன்கோன் மாவட்டம் (Jangaon district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். வாரங்கல் மாவட்டம் மற்றும் நல்கொண்ட மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. [2]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜன்கோன் நகரம் ஆகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]2,187.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சன்கோன் மாவட்டத்தின் வடக்கில் சித்திபேட்டை மாவட்டம், தெற்கில் சூரியபேட்டை மாவட்டம், கிழக்கில் வாரங்கல் கிராமபுற மாவட்டம், தெற்கில் சூரியபேட்டை மாவட்டம், மேற்கில் யதாத்ரி புவனகிரி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]சன்கோன் மாவட்டம் 2,187.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [3]2011-ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 5,82,457 ஆகும்.[3]பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 997 பெண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள் தொகை 12.6% ஆகவும், சராசரி எழுத்தறிவு 61.4% ஆகவும் உள்ளது. இம்மாவட்டம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–27 ஆகும். [4]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]சன்கோன் மாவட்டம் சன்கோன் கோட்டம், கான்பூர் கோட்டம் என வருவாய் கோட்டங்களையும், 13 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3][5] எ. தேவசேனா இப்புது மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் ஆவார்.[6]
வருவாய் வட்டங்கள்
[தொகு]சன்கோன் மாவட்டத்தின் சன்கோன் கோட்டம் மற்றும் கான்பூர் கோட்டத்திலுள்ள 13 வருவாய் வட்டங்களின் விவரம்:[5]
வ. எண் | ஜன்கோன் வருவாய் கோட்டம் | வ. எண் | சுடேசன் கான்பூர் வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | பச்சனப்பேட்டை | 9 | சில்பூர் |
2 | தேவருப்புலா | 10 | சாபர்காத் |
3 | குண்டலா | 11 | கொடகண்ட்லா |
4 | ஜன்கோன் | 12 | பலகுர்த்தி |
5 | லிங்கலகான்பூர் | 13 | சுடேசன் கான்பூர் |
6 | நர்மீட்டா | ||
7 | ரகுநாதபள்ளி | ||
8 | தரிகோப்புலா |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/.
- ↑ "Warangal (rural) district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 12 October 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ 3.0 3.1 3.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ 5.0 5.1 "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம் பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]