காசிரங்கா யானைத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசிரங்கா யானைத் திருவிழா
Kaziranga Elephant Festival
Kaziranga Elephant Festival 2009.jpg
2009 ஆம் ஆண்டு ஏழாவது காசிரங்கா யானைத் திருவிழாவில் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் யானைகள்.
நாட்கள்பிப்ரவரி
காலப்பகுதிஒவ்வோர் ஆண்டும்
அமைவிடம்(கள்)காசிரங்கா
அசாம்
துவக்கம்2002

காசிரங்கா யானைத் திருவிழா (Kaziranga Elephant Festival) என்பது ஆசிய யானைகளைப் பாதுகாக்கவும் அவற்றின் நலம் காக்கவும் ஒவ்வோர் ஆண்டும் அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் நடத்தப்படுகின்ற திருவிழாவாகும். அசாம் மாநில வனத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து இத்திருவிழாவை நடத்துகின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் மனிதர் மற்றும் யானைகள் இடையிலான சச்சரவுகளுக்கு தீர்வுகாண முற்படுவது இவ்விழா கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.[1][2][3] தலை முதல் பாதம்வரை அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிய யானைகள் இவ்விழாவில் பங்கேற்கின்றன. அணிவகுப்பு , ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் என பல்வேறு வகையான போட்டிகளில் அவை பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Elephant Festival". North East India. மூல முகவரியிலிருந்து 6 மார்ச் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 February 2010.
  2. "Elephant Festival – A Lifetime opportunity". Incredible Northeast India. மூல முகவரியிலிருந்து 18 பிப்ரவரி 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 February 2010.
  3. "Elephant Festival". Bharat Online. பார்த்த நாள் 21 February 2010.