உள்ளடக்கத்துக்குச் செல்

நாகாலாந்து

ஆள்கூறுகள்: 25°40′N 94°07′E / 25.67°N 94.12°E / 25.67; 94.12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகலாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாகாலாந்து
Nagaland
மேலிருந்து: கோஹிமாவிற்கு செல்லும் வழி, கபமோட்சு சிகரம், ஹார்ன்பில் திருவிழா

சின்னம்
அடைபெயர்(கள்): கிழக்கின் சுவிட்சர்லாந்து, திருவிழாக்களின் பூமி, உலகின் பால்கன் தலைநகரம்
குறிக்கோளுரை: Unity
(ஆங்கிலம்: ஒற்றுமை)
அமைவிடம்: நாகாலாந்து  (சிவப்பு) in இந்தியா  (அடர் சாம்பல்)
அமைவிடம்: நாகாலாந்து  (சிவப்பு)

in இந்தியா  (அடர் சாம்பல்)

ஆள்கூறுகள் (கோகிமா): 25°40′N 94°07′E / 25.67°N 94.12°E / 25.67; 94.12
நாடு இந்தியா
பகுதிவடகிழக்கு இந்தியா
மாநில அந்தசுது1 திசம்பர் 1963
தலைநகரம்கோகிமா
மிகப்பெரிய நகரம்திமாப்பூர்
மாவட்டங்கள்16
அரசு
 • நிர்வாகம்நாகாலாந்து அரசு
 • ஆளுநர்ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு)
 • முதலமைச்சர்நைபியு ரியோ (தே.ஜ.மு.க.)[1]
 • சட்டப் பேரவைநாகாலாந்து சட்டமன்றம்
ஓரவை (60 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 •  உயர் நீதிமன்றம்குவஹாத்தி உயர் நீதிமன்றம்-கோகிமா கிளை
பரப்பளவு
 • மொத்தம்16,579 km2 (6,401 sq mi)
 • பரப்பளவு தரவரிசை25வது
தாழ் புள்ளி
3,826 m (12,552 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,80,602
 • தரவரிசை25வது
 • அடர்த்தி119/km2 (310/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
797 001–798 627[2]
தொலைபேசி குறியீடு+91
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL
வாகனப் பதிவுNL
ம.மே.சு.Increase 0.676 (மத்திமம்)
ம.மே.சு. தரவரிசை20வது (2017)
படிப்பறிவு80.11% (15th)
அலுவல்மொழிஆங்கிலம்[3]
இணையதளம்www.nagaland.gov.in
^† இது நாகாலாந்து மாநில சட்டம், 1962 மூலம் அசாம் மாநிலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.

நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து திசம்பர் 1, 1961இல் ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது.

பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது.[5] இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.

வரலாறு

[தொகு]

பழமைத்தன்மை

[தொகு]
1875 ஆம் ஆண்டைச் சேர்ந்த அங்கமி நாகா பழங்குடியினரின் ஓவியம்.

நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், பொ.ஊ. 1228ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாகா மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன.

'நாகா' என்ற சொல்லின் தோற்றம் கூட தெளிவாக இல்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்தாக, இந்தப் பெயர் பர்மிய சொல்லான 'நாக' அல்லது 'நாகா' என்பதிலிருந்து உருவானது, அதாவது காதணிகளைக் கொண்ட மக்கள் என்பது இதன் பொருள். வேறு சிலர் அதை குத்தப்பட்ட மூக்கு என்று பொருள் கூறுகின்றனர்.[6] நாக்கா (naka) மற்றும் நாகா (naga) இரண்டும் பர்மாவில் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகிறது.[7] நாகாலாந்தின் பழங்கால பெயர் 'நாகனச்சி' அல்லது 'நாகன்சி', இது நாகா மொழியிலிருந்து வந்தது.[8]

தெற்காசியாவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் வருகைக்கு முன்னர், நாகா பழங்குடியினர், மீட்டி மக்கள் போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் மீது பர்மியர்களால் பல போர்கள், துன்புறுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படையெடுப்பாளர்கள் "தலையை வெட்டி வேட்டையாடவும்", இந்த பழங்குடி இனத்தவரின் செல்வங்களையும் தேடி வந்தனர். வடக்கு இமயமலையில் வாழும் மக்களைப் பற்றி பர்மிய வழிகாட்டிகளை பிரித்தானியர் கேட்டபோது, அவர்கள் 'நாகா' எனக் கூறினர். இது 'நாக' எனப் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு பயன்படுத்தப்பட்டது.

பிரித்தானிய இந்தியா

[தொகு]

நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரித்தானியர் 1832இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன.

பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 1879இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கோகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்துவந்த கிருத்துவ மறைபணியாளர்களால் பிரித்தானிய இந்தியாவின்,[9] நாகாலாந்தின் நாகா பழங்குடியினர் மற்றும் அண்டை மாநில மக்களை அவர்களின் ஆன்ம வாத சமயத்திலிருந்து கிறித்துவத்துக்கு மாற்றினர்.[10]

20ஆம் நூற்றாண்டு

[தொகு]

1944 ஆம் ஆண்டில், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் சப்பானிய இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவின் மீது பர்மா வழியாக படையெடுத்து. அது கோகிமா வழியாக இந்தியாவை விடுவிக்க முயன்றது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரித்தானிய இந்திய வீரர்களால் கோகிமாவின் பகுதி 1944 சூன் மாதம் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பாதி வீரர்களை இழந்து, பட்டினியால் பலரை இழந்ததுடன், பர்மா வழியாக வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர்.[11][12]

நாகா இயக்கம்

[தொகு]

1929 ஆம் ஆண்டில், சைமன் குழுவிடம் நாகா கிளப் (பின்னர் இது நாகா தேசிய அமைப்பானது) நாகா மக்களின் கோரிக்கை சமர்பித்தது. அதில் பிரித்தானிய இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரித்தானிய இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்கவேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர்.[13][14]

1929 முதல் 1935 வரையான காலப்பகுதியில், நாகா மக்களின் இறையாண்மைப் புரிதல் என்பது பாரம்பரிய பிராந்திய வரையறை அடிப்படையில் 'சுய-ஆட்சி' ஆகும். 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில், நாகர்கள் அசாமில் மட்டுமே தன்னாட்சி உரிமையைக் கோரியிருந்தனர்.

1946 ஆகத்து முதல் நாள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார். 1946க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர்.

1947 சூலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் தில்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன்படி நாகாலாந்து 1947 ஆகத்து 14இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16இல் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். 1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர்.[15]

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாலாந்து அசாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அது அரசாங்க மற்றும் சிவில் உள்கட்டமைப்பு சேதப்படுத்தியது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு 1955 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை அனுப்பியது. 1957ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத பழங்குடியினர், மாநிலத்துக்கள் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பழங்குடியினர் இராணுவம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின்மீது தாக்குதல்கள்களை அதிகரித்தனர். 1958இல் நாகாலாந்தில் இந்திய அரசானது ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையினால் பலர் கொல்லப்பட்டனர். 1960 சூலை மாதம் பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது.[16] இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின்படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது.[17]

அதன்படி, 1961ஆம் ஆண்டின் நாகாலாந்து இடைக்கால விதிமுறை விதிகளின் கீழ்,[18] அந்த பிரதேசமானது, பழங்குடியினர், பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தந்த பழங்குடியினரின் பயன்பாடு ஆகியவற்றின்படி பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அமைப்புக்குகீழ் விடப்பட்டது. இதன் விளைவாக, நாகாலாந்து மாநிலமானது 1962ஆம் ஆண்டு நாகலாந்து மாநில சட்டம் உருவானது.[19] 1963ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இடைக்காலக் கால அமைப்பு கலைக்கப்பட்டு நாகலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது 1963 திசம்பர் 1 அன்று கோகிமாவானது மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, 1964 சனவரி 11, அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது.[20]

இதைத் தொடர்ந்தும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டன, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால் இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1975ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் இந்திராகாந்தியால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1975 நவம்பரில், மிகப்பெரும் கிளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும் ஒரு சிறிய குழு இதை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் அவர்களது கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.[21]

நாகாலாந்தின் லாங்வா கிராமத்தில் ஒரு ஹெட்ஹண்டர்

மாவட்டங்கள்

[தொகு]
நாகாலாந்து மாநிலத்தின் மாவட்டங்கள்

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக 16 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;

  1. திமாப்பூர்
  2. கிபைர்
  3. கோகிமா
  4. லோங்லெங்
  5. மோகோக்சுங்
  6. மோன்
  7. பெரேன்
  8. பேக்
  9. துவென்சங்
  10. வோக்கா
  11. சுனெபோட்டோ
  12. நோக்லாக் மாவட்டம்
  13. செமினியு
  14. சமத்தோர்
  15. நியுலாந்து
  16. சூமௌகெடிமா

அரசியல்

[தொகு]

நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[22].

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,978,502 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.14% மக்களும், நகரப்புறங்களில் 28.86% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.58% ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 1,024,649 ஆண்களும் மற்றும் 953,853 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 931 வீதம் உள்ளனர். 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 119 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 79.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.11 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 291,071 ஆக உள்ளது. [5] நாகா இன மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார்.

சமயம்

[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 173,054 (8.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 48,963 (2.47 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,739,651 (87.93 %) ஆகவும்,, பௌத்த சமய மக்கள் தொகை 6,759 (0.34 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,890 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 3,214 (0.16 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,316 (0.12 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் பழங்குடி இன மொழியுமான நாகா மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

போக்குவரத்து

[தொகு]
நாகாலாந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை

இம்மாநிலத்தில் தொடருந்து மிகக் மிகக் குறைந்த அளவில் 7.98 மைல்கள் (12.84 km) நீளத்தில் இருப்புப்பாதை கொண்டுள்ளது.

நாகாலாந்து மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. இம்மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000 கி மீ நீளத்தில் உள்ளது.

ஹார்ன்பில் விழா

[தொகு]

நாகாலாந்தின் பழங்குடிமக்களின் விழாவான ஹார்ன்பில் விழா உலகப்புகழ் பெற்றது.

திட்டங்கள்

[தொகு]

இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பப் பணி, அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.[23][24]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Neiphiu Rio sworn in as Nagaland Chief Minister, becomes 1st Nagaland leader to take oath outside Raj Bhavan". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 8 March 2018 இம் மூலத்தில் இருந்து 8 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180308231906/http://www.newindianexpress.com/nation/2018/mar/08/neiphiu-rio-sworn-in-as-nagaland-chief-minister-becomes-1st-nagaland-leader-to-take-oath-outside-ra-1783953.html. 
  2. "Village/Locality based Pin mapping as on 16th March 2017". data.gov.in. Department of Posts, Ministry of Communications, Government of India. 16 March 2017. Archived from the original on 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 24 June 2018.
  3. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  4. "Mt. Saramati". kiphire.nic.in. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  5. 5.0 5.1 Nagaland Population Census data 2011
  6. Inato Yekheto Shikhu (2007). A re-discovery and re-building of Naga cultural values. Daya Books. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89233-55-6.
  7. Robert Reid, Michael Grosberg (2005). Myanmar (Burma). Lonely Planet. p. 380.
  8. "Nagaland to be renamed to ancient name". Arunima Govindan.
  9. Gordon Pruett, Christianity, history, and culture in Nagaland, Indian Sociology January 1974 vol. 8 no. 1 51-65
  10. Tezenlo Thong, "'Thy Kingdom Come': The Impact of Colonization and Proselytization on Religion among the Nagas," Journal of Asian and African Studies, no. 45, 6: 595–609
  11. Dougherty, Martin J. (2008). Land Warfare. Thunder Bay Press. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781592238293.
  12. Dennis, Peter; Lyman, Robert (2010). Kohima 1944: The Battle That Saved India. Osprey. p. [page needed]..
  13. A.M. Toshi Jamir, 'A Handbook of General Knowledge on Nagaland' (2013, 10th Edition) pg. 10
  14. SK Sharma (2006), Naga Memorandum to the Simon Commission (1929), Mittal Publications, New Delhi India
  15. உதயகுமார் (23 செப்டம்பர் 2017). "நாகாலாந்து - நடந்ததும் நடப்பதும்". கட்டுரை. கருஞ்சட்டைத் தமிழர். பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  16. "The 16-point Agreement arrived at between the Government of India and the Naga People's Convention, July 1960". பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  17. உதயகுமார் (30 செப்டம்பர் 2017). "நாகாலாந்து நடந்ததும் நடப்பதும்". கட்டுரை. கருஞ்சட்டைத் தமிழர். பார்க்கப்பட்ட நாள் 7 நவம்பர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  18. Suresh K. Sharma (2006). Documents on North-East India: Nagaland. Mittal Publications. pp. 225–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183240956.
  19. "The State Of Nagaland Act, 1962". பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  20. Ovung, Albert. "The Birth of Ceasefire in Nagaland". Archived from the original on 2013-07-28. பார்க்கப்பட்ட நாள் 2017-11-06.
  21. Nagaland, Encyclopædia Britannica (2011)
  22. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.
  23. http://indiatoday.intoday.in/story/modi-nagaland-hornbill-festival-northeast-has-natural-economic-zones/1/404568.html
  24. DD News; 01.12.2014; (TV channel)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து&oldid=4035955" இலிருந்து மீள்விக்கப்பட்டது