கோஹிமா யுத்தம்
Appearance
கோஹிமா போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரில் பர்மிய இயக்கம் பகுதி | |||||||
கோஹிமாவில் பிரித்தானிய பாதுகாப்பின் முதன்மையான, கேரிஸன் மலை போர்க்களக் காட்சி. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | சப்பான் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மான்டேக் ஸ்டாப்ஃபோர்ட் | கோட்டோ சோதோ | ||||||
பலம் | |||||||
துவக்கத்தில்: தோராயமாக. 1 காலாட்படை 1500 ஆண்கள் பணியில் இறுதியில்: 2 காலாட்படை பிரிவு 1 "சிந்திட்" பிரிகேடு 1 மோட்டார் பிரிகேட் | 1 காலாட்படை பிரிவு: 12,000–15,000 [1] | ||||||
இழப்புகள் | |||||||
4,064[2] | 5,764–7,000[2] |
கோஹிமா சண்டை இரண்டாம் உலகப்போரில் பசிபிக் போர்க்களத்தில் நடந்த ஒரு திருப்புமுனையாகும். ஜப்பானியர்களின் யுகோ தாக்குதிட்டத்தை இந்த போர் திசை திருப்பி ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியது. கோஹிமா சண்டை மூன்று பகுதிகளாக ஏப்ரல் 4, 1944 முதல் ஜூன் 22, 1944 வரை நாகலாந்தில் உள்ள கோஹிமா நகரப்பகுதியில் நடைபெற்றது.
ஜப்பானியர்கள் கோஹிமா முகடை கைப்பற்ற விளைந்தனர். இந்த வழியாகத்தான் பிரித்தானிய மற்றும் இந்திய வீரர்களுக்கு உணவு மற்றும் போர்த்தளவாடங்கள் அனுப்பப்பட்டன. பல்வேறு தாக்குதல்களுக்கு பிறகு ஜூன் 22 அன்று இம்பால் முற்றுகை முடிவுக்கு வந்தது.
இந்த போர் கிழக்கின் ஸ்டாலின்கிராடு என்று அறியப்படுகிறது. 2013 பிரித்தானிய இராணுவ அருங்காட்சியகம் இப்போரை பிரிட்டனின் மிகப்பெரும் போர்களில் ஒன்றாக வரையறுத்தது.