ஹார்ன்பில் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாகா பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனத்தை ஒத்திகை பார்க்கின்றனர்.

ஹார்ன்பில் திருவிழா, இந்திய மாநிலமான நாகாலாந்தில் நடைபெறும் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும்[1]

இந்திய ஹார்ன்பில் பறவை

நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை நம்பியுள்ளனர். எனவே, அவர்களின் திருவிழாக்களும் உழவுத் தொழிலை அடிப்படையானவையாக இருக்கின்றன. இந்த மக்கள் திருவிழாக்களில் கலந்துகொள்வதை புனிதமாக கருதுகின்றனர்.[2]

பழங்குடியின மக்களின் ஒற்றுமையை பேணி காக்கவும், பண்பாட்டை போற்றவும் நாகாலாந்து அரசு தீர்மானித்தது. 2000ஆம் ஆண்டு முதல் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.[3]

ஹார்ன்பில் விழாவில் போடோ-கச்சாரி பழங்குடி பெண்கள்

பழங்குடியினர் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளில் இருவாய்ச்சி பறவைக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் காரணமாக, இந்த திருவிழாவுக்கு பறவையின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது.

பாரம்பரிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட ஓவியங்களும், சிலைகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பழங்குடியின மக்கள் தங்கள் நாட்டுப்புற பாடல்களை பாடியும், பாரம்பரிய நடனமாடியும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்கின்றனர்.[4]

சான்றுகள்[தொகு]

  1. "Nagaland – Hiking and Hornbill Festival in India". பார்த்த நாள் 2015-12-12.
  2. Hornbill Festival - Where the Action is..., EF News International. 16 November 2011.
  3. Hornbill Festival of Nagaland, India-north-east.com
  4. "Hornbill Festival 2015 - Hornbill Rock Contest". பார்த்த நாள் 2015-12-12.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ன்பில்_திருவிழா&oldid=3003681" இருந்து மீள்விக்கப்பட்டது