நைபியு ரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நைபியு ரியோ
நாகாலாந்து முதலமைச்சர்
பதவியில்
மார்ச்சு 12, 2008 - நடப்பு
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் இற்றைய ஆட்சியாளர்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 11, 1950 (1950-11-11) (அகவை 71)
கோகிமா, இந்தியா
அரசியல் கட்சி நாகாலாந்து மக்கள் முன்னணி
As of மார்ச்சு 12, 2008
Source: [1]

நைபியு ரியோ (Neiphiu Rio, பிறப்பு 1950) இந்திய வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் தற்போதைய முதலமைச்சர். இவர் முதலமைச்சராக மார்ச்சு 6,2003 முதல் சனவரி 3,2008 வரையும் பின்னர் மார்ச்சு 12,2008 முதல் நடப்பு முதல்வராகவும் உள்ளார்.

இவர் கோகிமா மாவட்டத்திலுள்ள துபெமா கிராமத்தில் குயோலோலி ரியோவிற்குப் பிறந்தவர்.தனது இளமைக் கல்வியை கோகிமா பாப்டிஸ்ட் ஆங்கிலப் பள்ளியிலும் புரூலியா சைனிக் பள்ளியிலும் கற்றார்.

ரியோ நாகாலாந்து மக்கள் முன்னணியின் உறுப்பினர். பாரதிய ஜனதா கட்சியின் மாநில கிளையுடனும் பிற நாகாலாந்து வட்டார கட்சிகளுடனும் "நாகாலாந்து சனநாயக கூட்டணி" என்ற கூட்டணி அமைத்து 2003ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்றார். இது பத்தாண்டுகளாக தொடர்ந்து வந்த காங்கிரசின் ஆட்சியை முடிவுறச் செய்தது. ரியோ முன்னதாக காங்கிரசு கட்சியில் இருந்தபோது எஸ். சி. ஜமீரின் தலைமையில் அமைந்திருந்த காங்கிரசு ஆட்சியில் மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.

சனவரி 3,2008 அன்று இவரது ஆட்சி நடுவண் அரசால் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டது.[1] இதனை அடுத்து நடந்த தேர்தல்களில் இவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணியின் தலைவர் என்ற முறையில் ஆளுநரால் அரசமைக்க அழைக்கப்பட்டார். மீண்டும் மாநில முதல்வராக மார்ச்சு 12,2008 அன்று பொறுப்பேற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நைபியு_ரியோ&oldid=3248613" இருந்து மீள்விக்கப்பட்டது