நியூலாந்து மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°54′32″N 93°59′24″E / 25.9089°N 93.9899°E / 25.9089; 93.9899
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூலாந்து
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
நிறுவப்பட்ட நாள்18 டிசம்பர் 2021
தலைமையிடம்நியூலாந்து
அரசு
 • மக்களவத் தொகுதிநாகாலாந்து மக்களவைத் தொகுதி
 • மக்களவை உறுப்பினர்[1]டோக்கியோ யெப்தோம், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
 • மாவட்ட ஆட்சியர்அஜித் குமார் இஆப
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,876
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

நியூலாந்து மாவட்டம் (Niuland District) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் 14-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நியூலாந்து நகரம் ஆகும். இம்மாவட்டம் திமாப்பூர் மாவட்டத்தின் நியூலாந்து வருவாய் வட்டப் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது.[2]இம்மாவட்டம் திமாப்பூர் நகரத்திற்கு கிழக்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; கோகிமாவிற்கு வடகிழக்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 11,876 ஆகும்.

புவியியல்[தொகு]

நியூலாந்து மாவட்டத்தின் வடக்கில் அசாம் மாநிலம், கிழக்கில் கோகிமா மாவட்டம், தெற்கில் சூமௌகெடிமா மாவட்டம், மேற்கில் திமாப்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மேற்கோளகள்[தொகு]

  1. "Lok Sabha Members". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் December 18, 2021.
  2. "Nagaland creates 3 more districts". The Assam Tribune. December 18, 2021. https://assamtribune.com/north-east/nagaland-creates-3-more-districts-1344462. "https://ta.wikipedia.org/w/index.php?title=நியூலாந்து_மாவட்டம்&oldid=3711172" இலிருந்து மீள்விக்கப்பட்டது