சூமௌகெடிமா மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°47′30″N 93°46′54″E / 25.7916°N 93.7818°E / 25.7916; 93.7818
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூமௌகெடிமா மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
நிறுவப்பட்ட நாள்18 டிசம்பர் 2021
தோற்றுவித்தவர்நாகாலாந்து அரசு
தலைமையிடம்சூமௌகெடிமா
அரசு
 • மக்களவைத் தொகுதிநாகாலாந்து
 • நாடாளுமன்ற உறுப்பினர்[1]தோக்கிஹோ யெப்தோம், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
 • மாவட்ட ஆட்சியர்அபிநவ சிவம், இஆப
பரப்பளவு[2]
 • மொத்தம்570 km2 (220 sq mi)
மக்கள்தொகை (2011)[3]
 • மொத்தம்125,400
 • அடர்த்தி220/km2 (570/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
நெடுஞ்சாலைகள்அசாம் மாநில நெடுஞ்சாலைகள் 1 & 2 மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 2 & 129ஏ மற்றும் ஆசிய நெடுஞ்சாலை 1

சூமௌகெடிமா மாவட்டம் (Chümoukedima District) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் 15-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று நிற்வப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் சூமௌகெடிமா நகரம் ஆகும். இம்மாவட்டம் திமாப்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு சூமௌகெடிமா மாவட்டம் மற்றும் நியூலாந்து மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5]

புவியியல்[தொகு]

570 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சூமௌகெடிமா மாவட்டத்தின் கிழக்கில் கோகிமா மாவட்டம், தெற்கில் பெரேன் மாவட்டம், வடகிழக்கில் நியூலாந்து மாவட்டம், வடக்கில் திமாப்பூர் மாவட்டம், மேற்கிலும், வடமேற்கிலும் அசாம் மாநிலத்தின் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் எல்லைகாள உள்ளது.இம்மாவட்டத்தின் ஊடாக பாயும் சாத்தி ஆறு பின்னர் தனசிறீ ஆற்றுடன் கலக்கிறது.

மாவ்ட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் செய்தேகேமா, மெடிழிபெமா மற்றும் தனசிரிபார் என 3 வருவாய் வட்டங்களையும், சூமௌகெடிமா நகராட்சியும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சூமௌகெடிமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,400 ஆகும்.

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

சூமௌகெடிமா நகரத்திலிருந்து திமாப்பூர் தொடருந்து நிலையம் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சாலைகள்[தொகு]

அசாம் மாநில நெடுஞ்சாலைகள் 1 & 2 மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 2 & 129ஏ மற்றும் ஆசிய நெடுஞ்சாலை 1 ஆகியவைகள் ஆசிய சூமௌகெடிமா மாவட்டம் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சூமௌகெடிமா_மாவட்டம்&oldid=3710807" இருந்து மீள்விக்கப்பட்டது