தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
Facta Non Verba
சுருக்கக்குறிNDPP
தலைவர்நைபியு ரியோ
நிறுவனர்சிங்வாங் கோனியாக்
மக்களவைத் தலைவர்டோகிகோ யேப்தோமி
தொடக்கம்அக்டோபர் 2017
முன்னர்ஜனநாயக முற்போக்கு கட்சி
தலைமையகம்எண்:155 (1), வார்டு எண்.4, சுமுக்கேதிமா, திமாப்பூர், நாகாலாந்து, இந்தியா - 797103
கொள்கைபிராந்தியத்துவம்
நிறங்கள்வெள்ளை, சிவப்பு, கருப்பு
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதேஜகூ (2018-முதல்)
தேசியக் கூட்டுநர்நைபியு ரியோ
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 545
(தற்போது 518 உறுப்பினர்கள்+ 1 மக்களவைத் தலைவர்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(நாகாலாந்து சட்டமன்றம்)
17 / 60
இணையதளம்
https://ndpp.co.in/

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்தியாவின், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் தலைவர் சிங்வாங் கோனியாக் என்பவர் ஆவார்.[1] இக்கட்சியின் சின்னம் பூகோளமாகும்.

இக்கட்சியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து, நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ ஜனநாயக முற்போக்கு கட்சியை உருவாக்கினார்.[2][3] 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஜனநாயக முற்போக்கு கட்சி பின், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.[4] இக்கட்சியானது தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது.[5] பின்னர் அதே மாதத்தில், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, இக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.[6]

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் தேஜமுக, 2,53,090 வாக்குகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. இது 25.20 % வாக்கு வங்கி ஆகும். தேஜமுக பாஜக உடன் சேர்ந்த ஆட்சி அமைத்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இறப்பால் 17 இடங்கள் தற்போது உள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]