தச மகா வித்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தச மகா வித்யா உருவங்கள்: காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேசுவரி, பைரவி, சின்னமாஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலா.

இந்து சமயத்தில் தச மகா வித்யா' ('Dasha-Mahavidya) என்பது காளி (துர்கா) தேவியின் பத்து உருவங்களை குறிக்கும். தச என்றால் பத்து வித்யா என்றால் அறிவு எனப் பொருள். இந்தப் பத்து தேவிகளும் பெண்மையின் சக்தியை தாய்மை முதல் கோபம் வரை அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள். தசமகா வித்யா தேவிகளின் வருகை சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது. உருவாவதும் பெண்ணால், அழிவதும் பெண்ணால் என நம்பும் சாக்தர்கள், இந்த பத்து தேவிகளையும் உளமார வழிபட்டனர். தேவி பாகவத புராணத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்களில் ஏழாவதான "சண்டி" சாக்தர்களின் "தேவி கீதை" ஆனது. இந்த பத்து தேவிகளில் சில தேவியர் தாந்திரிகர்களால் மட்டும் ஆராதனை செய்யப்படுவர்.

பெயர்கள்[தொகு]

சாக்தர்கள் ஒரே சக்தியே பல வடிவம் கொண்டுள்ளது என நம்புகின்றனர். அன்னை ஆதி சக்தியே தச மகா வித்யா என பத்து உருவில் வேறுபட்டு நிற்கிறாள் எனவும் கருதுவர். தச மகா வித்யா தேவிகளின் பெயர்கள்:

  1. காளி
  2. தாரா
  3. திரிபுரசுந்தரி (சோடஷி )
  4. புவனேசுவரி
  5. பைரவி
  6. சின்னமாஸ்தா
  7. தூமாவதி
  8. பகளாமுகி
  9. மாதங்கி (சியாமளா)
  10. கமலாத்மிகா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தச_மகா_வித்யா&oldid=1693671" இருந்து மீள்விக்கப்பட்டது