மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் மாங்காட்டில் அமைந்துள்ளது. [1] மாங்காடு நகரம் பூந்தமல்லிக்கு அருகில் உள்ளது. இதை ஆதி சங்கராச்சாரியர் நிறுவியதாகக் கருதுகின்றனர்[சான்று தேவை]. இங்கு அன்னை பார்வதி தவமிருந்து, காஞ்சி ஏகாம்பரேசுவரரைத் திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறு கூறுகின்றது.

புராண வரலாறு[தொகு]

அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணைப் பொத்த, உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காட்டில் வந்து நெருப்பில் தவமிருந்தாள். பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. ஆதி சங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது.

கோயில்[தொகு]

இது சோழர் காலக் கட்டிடக்கலையை காட்டுகிறது. தற்போதே ராஜ கோபுரம் கட்டப்பட்டது. நுழைவாயிலுக்கு அருகே வினாயகர் சிலை உள்ளது. கோயிலின் நடுவில் அர்த்த மேரு மகா சக்கரம் உள்ளது. இங்கு அம்மன் "மாங்காடு அன்னை காமாட்சி" என்று பெயர் பெற்றுள்ளாள்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]