அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிகாரிகள் பயிற்சிக் கழகம்
குறிக்கோளுரைமரியாதைக்குரிய பணி
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Serve with Honour
வகைஇராணுவப் பயிற்சிக் கழகம்
உருவாக்கம்15 சனவரி 1963 (1963-01-15) (சென்னை)
அமைவிடம்,
வளாகம்750 ஏக்கர்கள் (3.0 km2) (சென்னை)
800 ஏக்கர்கள் (3.2 km2) (கயை)
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் சேவையைப் பாராட்டும் விதமாக 2013-இல் வெளியிட்ட அஞ்சல் தலை


சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (Officers Training Academy-OTA) என்பது இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையமாகும்.[1][2] இந்த மையம் குறுகிய கால இராணுவ சேவைக்கான அதிகாரிகளை உருவாக்கப் பயன்படுகிறது.[3][4]

வரலாறு[தொகு]

1942-45 காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போரில் இந்திய மற்றும் பொதுநலவாய நாடுகளின் இராணுவத்திற்குத் தேவைப்பட்ட இராணுவ அதிகாரிகளை உருவாக்குவதற்காக ஏழு அதிகாரிகள் பயிற்சி மையங்கள் இந்தியாவில் துவக்கப்பட்டன. ஆனால் போர் முடிந்ததும் இம்மையங்கள் மூடப்பட்டு விட்டன.

இந்திய சீனப் போரையடுத்து 1962 இல் இந்தியாவில் இராணுவ அதிகாரிகளின் அவசரகாலத் தேவைகளுக்காக புனே மற்றும் சென்னையில் இரு அதிகாரிகள் பயிற்சிப் பள்ளிகள் (Officers Training Schools-OTS) துவக்கப்பட்டன. இப்பள்ளிகள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் 1962 ஆம் ஆண்டு, செப்டபர் மாதத்தில் துவக்கப்பட்டன. சென்னை பயிற்சிப் பள்ளி பிரிகேடியர் ராம் சிங்கைத் முதல் படைத்தலைவராகக் கொண்டு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. புனேயில் நிறுவப்பட்ட பயிற்சிப்பள்ளி சிறிதுகாலத்திற்குப் பின் மூடப்பட்டது. எனினும் தொடர்ந்து செயற்பட்ட சென்னை பயிற்சிப் பள்ளி, 1965 ஆம் ஆண்டு பெப்பிரவரி இரண்டாம் தேதியிலிருந்து பள்ளியின் நோக்கத்தை குறுகியகால சேவை சீர் ஆணைய அதிகாரிகளைப் பயிற்றுவிப்பதாக மாற்றுவதற்கான அனுமதி பெற்றது.

குறுகியகால சேவை ஆணையத்தின் இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிகள், அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு முதல் இப்பயிற்சிக் கழகத்திற்கு நிரந்தர அனுமதி வழங்கப்பட்டு அதன் பெயரும் அதிகாரிகள் பயிற்சிக் கழகம் என மாற்றம் பெற்றது.

இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாகச் சேர்ந்த 25 பேர் கொண்ட முதல் பெண் அதிகாரிகள் அணி 1992-இல் இக்கழகத்தில் பயிற்சி பெற்றவர்களாவர்.[5]

அமைவிடம்[தொகு]

இந்த பயிற்சி மையமானது தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்திற்குட்பட்ட ஆலந்தூரில் 750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையத்தின் ஓடு பாதைக்கு வடக்கே அமைந்துள்ளது.[6]

அளிக்கப்படும் பயிற்சிகள்[தொகு]

இந்த பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் 48 வார கால பயிற்சி இந்திய இராணுவத்தின் மருத்துவப் பிரிவு நீங்கலாக அனைத்துப் பிரிவுகளுக்கும் அதிகாரிகளை தயார்படுத்துகிறது.

பயண வழிகள்[தொகு]

சென்னை மாநகரின் அனைத்துப் பேருந்து நிலையங்களிலிருந்தும் பேருந்து மூலமாக அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை) சென்றடையலாம். மகிழுந்து மூலமாக தேசிய நெடுஞ்சாலை 45 இல் பயணித்து கத்திப்பாரா முனை அருகிலுள்ள ஓடிஏ நிறுத்தத்தை அடையலாம். மின்சாரத் தொடர் வண்டி மூலமாகச் சென்றால் தாமஸ் மவுண்ட் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். மெட்ரோ தொடர் வண்டி மூலமாகச் சென்றால் ஓடிஏ நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "இந்து நாளிதளில் அதிகாரிகள் பயிற்சிக் கழகம்". http://www.thehindu.com/features/metroplus/officers-training-academy-chennai/article6990550.ece. 
  2. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் அதிகாரிகள் பயிற்சிக் கழகம்" இம் மூலத்தில் இருந்து 2016-05-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160505024022/http://www.newindianexpress.com/photos/nation/article502943.ece. 
  3. "அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் குறுகிய கால இராணுவ சேவை". http://joinindianarmy.nic.in/alpha/types-of-commission.htm#tab-2. 
  4. "இந்திய இராணுவ குறுகிய கால இராணுவ சேவைப் பற்றிய தகவல்". https://www.urbanpro.com/a/joining-indian-army-short-service-commission-ssc. 
  5. "OTA: Grooming Leaders". Sainik Samachar, Ministry of Defence. 2001-05-15. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
  6. "அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை) அமைவிடம்" இம் மூலத்தில் இருந்து 2016-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160405235057/http://address007.com/Address-of-Officers-Training-Academy-Chennai-0198. 

வெளி இணைப்புகள்[தொகு]