உள்ளடக்கத்துக்குச் செல்

அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி
High Altitude Warfare School
வகைஇந்திய இராணுவ அகாதமி
உருவாக்கம்டிசம்பர், 1948[1]
அமைவிடம், ,

அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி (High Altitude Warfare School (HAWS) இமயமலையின் பனிபடர்ந்த மிக உயரமான மலைப்பகுதிகளில் குளிர்காலங்களிலும் இந்தியப் படைவீரர்கள் போரிடுவதற்கு பயிற்சி தருவதற்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் குல்மார்க் பகுதியில், அப்போது இராணுவ பிரிகேடியராக இருந்த கே. எஸ். திம்மையாவால் இந்த பனிமலை போர் பயிற்சிப் பள்ளி (ski school) 1948-இல் துவக்கப்பட்டது. பின்னர் 1962-இல் இதன் பெயர் அதிஉயர் பனிமலை போர்ப் பயிற்சிப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பயிற்சிப் பள்ளி உலகின் மலைப்போர்க்கலை பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இப்பயிற்சி பள்ளியில் ஆண்டுதோறும் ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வரும் இராணுவ வீரர்களுக்கு. இந்த அதிஉயர் மலை போர்ப் பயிற்சி பள்ளி நிறுவனம், சியாச்சின் போன்ற பனிபடர்ந்த உயரமான மலைகளில் போரிடுதவதற்கு தேவையான சிறப்புப் பயிற்சிகள் வழங்குகிறது. [2][3][4][5]

வரலாறு

[தொகு]

1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது, இந்தியாவின் காஷ்மிரின் வடக்கே அமைந்த பனிபடர்ந்த உயரமான மலைப் பகுதியான ஜில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளை கைப்பற்றிய, பாகிஸ்தானிய பஷ்தூன்களிடமிருந்து, போதிய மலைப்போர் பயிற்சியில்லாத இந்திய இராணுவத்தால் கைப்பற்ற இயலவில்லை. எனவே இந்தியப் படைவீரர்களுக்கு பனிபடந்த உயரமான மலைகளில் போரிடுவதற்கு தேவையான பயிற்சி வழங்கவே, டிசம்பர் 1948-இல் பிரிகேடியாராக இருந்த கே. எஸ். திம்மையா தலைமையில், காஷ்மீரின் குல்மார்க்கில் இந்த மலைப் போர் பயிற்சிப் பள்ளி நிறுவப்பட்டது. 8 ஏப்ரல் 1962-இல் இப்பயிற்சிப் பள்ளியை தரம் உயர்த்தி அதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]

வழங்கும் பயிற்சிகள்

[தொகு]

ஆண்டுதோறும் இப்பயிற்சி பள்ளி கோடைக்காலத்தில் மே முதல் அக்டோபர் வரை காஷ்மீரின் சோன்மார்க்கிலும், பின்னர் குளிர்காலத்தில் சனவரி முதல் ஏப்ரல் வரை குல்மார்க்கிலும் குளிர்கால போர்ப் பயிற்சி வழங்குகிறது.[6][7] இப்பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்தவர்களுக்கு, உலகின் உயரமான மலைப்போர்க்களமான காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். [8]

ஊடகம்

[தொகு]

இந்த பயிற்சிப் பள்ளி வழங்கும் பனிபடர்ந்த உயரமான மலைகளில் ஏறுவது, வாழ்வது, போரிடுவது போன்ற பயிற்சிகளை டிஸ்கவரி சானல் வீர் டிஸ்கவரி ("Veer by Discovery") எனும் தலைப்பில் ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Recruitment and Training". Ministry of Defence, Government of India. Archived from the original on 20 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
  2. High Altitude Warfare School: Where Indian jawans are trained to survive in Siachen
  3. Pandit, Rajat (1 May 2004). "High-altitude warfare school takes global aim". Times of India (New Delhi). http://timesofindia.indiatimes.com/india/High-altitude-warfare-school-takes-global-aim/articleshow/651951.cms. 
  4. "Arctic Army officer excels on India's high ground". www.army.mil (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-18.
  5. Press, Associated (2010-02-08). "Kashmir avalanche kills Indian troops at high-altitude training camp" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2010/feb/08/kashmir-avalanche-kills-indian-soldiers. 
  6. "A first: Night ski training facility at Gulmarg resort". The Tribune. https://www.tribuneindia.com/news/jammu-kashmir/a-first-night-ski-training-facility-at-gulmarg-resort/707315.html. 
  7. Hooda, Deepshikha (2018-07-11). "High Altitude Warfare School: Where Indian jawans are trained to survive in Siachen". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/defence/high-altitude-warfare-school-where-indian-jawans-are-trained-to-survive-in-siachen/articleshow/50968653.cms. 
  8. "India's snow warriors". UPI Asia. 2010-01-22. http://www.upiasia.com/Security/2010/01/22/indias_snow_warriors/4083/. பார்த்த நாள்: 2011-10-23. 
  9. "High Altitude Warfare School Full Episodes | Veer by Discovery". YouTube. 2018-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
  10. "Veer by Discovery". YouTube. 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.

வெளி இணைப்புகள்

[தொகு]