தேசிய பாதுகாப்புக் கல்லூரி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய பாதுகாப்புக் கல்லூரி
குறிக்கோளுரைஅறிவே பலம்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Wisdom is Strength"
வகைஇராணுவ அகாதமி
உருவாக்கம்27 ஏப்ரல் 1960
கட்டளை அதிகாரிஏர் மார்ஷல், திபேந்து சௌத்திரி
அமைவிடம்,
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்ndc.in

புது தில்லி இல் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய இராணுவத்தின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு மூலோபாய பயிற்சினை வழங்கும் மிக உயர்ந்த நிறுவனம் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும், இரண்டு நட்சத்திர தர வரிசையில் உள்ள இராணுவ அதிகாரிகள், இந்திய அரசின் இணைச் செயலாளர் தகுதியில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, வியட்நாம், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 அதிகாரிகள் இக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.[1]

இந்த கல்லூரி தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விஷயங்களில் இந்திய அரசுக்கு மூலோபாய தலைமையை வழங்குகிறது, மேலும் பாதுகாப்பு விசயங்களில் ஒரு சிந்தனைக் குழுவாகவும் செயல்படுகிறது மற்றும் இந்திய பாதுகாப்பு கண்ணோட்டத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான நிலையை வகிக்கிறது.

வரலாறு[தொகு]

1947-ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்கு முன்னர், இந்திய இராணுவம், இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் முக்கியமான கட்டளைகளுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இம்பீரியல் பாதுகாப்பு கல்லூரி வழங்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். 27 ஏப்ரல் 1960 அன்று துவக்கப்பட்ட இக்கல்லுரியின் முதல் கட்டளை அதிகாரியாக, லெப்டினன்ட் ஜெனரல் கன்வர் பகதூர் சிங் நியமிக்கப்பட்டார்.[2]

கல்லூரியின் கட்டளை அதிகாரி[தொகு]

கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகம் உட்பட கல்லூரியின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருக்கும் கமாண்டன்ட் எனும் கட்டளை அதிகாரியின் தலைமையில் இக்கல்லூரி செயல்படுகிறது. ஒவ்வொரு தளபதியின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். இதன் கட்டளை அதிகாரி இந்திய இராணுவம், இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படை இடையே சுழலும்.

பாடநெறி[தொகு]

இது ஒவ்வொரு ஆண்டும் 47 வார தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வு படிப்பை நடத்துகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் முதல் வாரத்தில் முடிகிறது. முழு பாடமும் இரண்டு பருவமாக, ஆறு பாடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடநெறி இந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான விரிவான பயணத்தையும் உள்ளடக்கியது, இங்கு பாடநெறி உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்களையும் முக்கியமான முடிவெடுப்பவர்களையும் சந்தித்து மாநிலத்தின் / நாட்டின் அரசியல், சமூக மற்றும் மூலோபாய நிலப்பரப்பைப் புரிந்துகொள்கிறார்கள்.

ஆய்வு முறை[தொகு]

ஒவ்வொரு ஆய்வின் போதும், பாடநெறி ஒருங்கிணைந்த ஏழு பகுப்பாய்வுக் குழுக்களாகப் (Integrated Analysis Groups (IAG) பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுப்பாய்வுக் குழுவிலும் 13-14 உறுப்பினர்கள் (4–5 ராணுவ அதிகாரிகள், 1 கடற்படை அதிகாரி, 1-2 விமானப்படை அதிகாரிகள், 3–4 இஆப / இகாப / இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகள் மற்றும் 4–5 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள்) உள்ளனர். சிக்கல்கள், கலந்துரையாடல்கள், ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் விளக்கக்காட்சிகளை பகுப்பாய்வு செய்வதற்கான நோக்கத்திற்காக ஒவ்வொரு பகுப்பாய்வுக் குழுவும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 2006-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் எம்.பில்., பட்டம் வழங்குவதற்காக இக்கல்லூரியானது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

ஆசிரியர்கள்[தொகு]

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பீடம் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் குடிமைச் சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. வழக்கமாக 7 ஆசிரிய உறுப்பினர்கள் ( இராணுவம் – 3, கடற்படை – 1, விமானப்படை – 1, ஐ.ஏ.எஸ் – 1 மற்றும் இ வெ ப – 1) கொண்டது. இந்த 7 வழக்கமான பீடங்களைத் தவிர, கல்லூரியில் விரிவுரைகளை வழங்க தலைசிறந்த பல்துறை சிந்தனையாளர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், வணிகத் தலைவர்கள், இந்தியா மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நட்பு நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் ஆகியோரை இக்கல்லூரி தவறாமல் அழைக்கிறது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
National Defence College (India)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.