பெங்களூரு இராணுவப் பள்ளி

ஆள்கூறுகள்: 12°57′45″N 77°36′31″E / 12.962372°N 77.608505°E / 12.962372; 77.608505
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஷ்டிரிய இராணுவப் பள்ளி, பெங்களூரு
Rashtriya Military School, Bangalore
Bangalore Military School 4
அமைவிடம்
பெங்களூரு, கர்நாடகா
இந்தியா
அமைவிடம்Latitide: 12° 57' 44.5392" Longitude: 77° 36' 30.6174"
தகவல்
வகைஇராணுவப் பள்ளி
குறிக்கோள்சீலம் பரம் பூஷணம்
(நற்குணமே மிக உயர்ந்த நல்லொழுக்கம்)
தொடக்கம்1946
அதிபர்ஜி. ஜெ. உரங்கர்
பள்ளித் தலைவர்DGMT
தரங்கள்வகுப்புகள் 6-12
மாணவர்கள்200
Campus size68-ஏக்கர் (0.28 km2)
Campus typeஉண்டு உறைவிடப் பள்ளி (Boarding school)
நிறங்கள்வெளிர் நீலம் மற்றும் அடர் நீலம்         
இணைப்புCBSE
நிறுவனர்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னர்
நேரு, இராஜாஜி     நீலம்      சிவப்பு
சாஸ்திரி, தாகூர்     பச்சை      மஞ்சல்
இணையம்

இராஷ்டிரிய இராணுவப் பள்ளி (Rashtriya Military School Bangalore) இந்தியாவின் கர்நாடகா மாநிலத் தலைநகரம் பெங்களூருவில் அமைந்த உண்டு, உறைவிடப் பள்ளி ஆகும். [1] இது 1 ஆகஸ்டு 1946-இல் நிறுவப்பட்டது.[2] இது போன்ற இராணுவப் பள்ளிகள் இந்தியாவில் ஐந்து உள்ளது.

இராணுவப் பள்ளியின் முதன்மை நுழைவாயில்

கர்நாடகா, கேரளா மற்றும் கோவா பகுதிகளுக்கான இராணுவக் கட்டளை அதிகாரியே இப்பள்ளியின் தலைமை நிர்வாகி ஆவார். [3]மாணவர்களை பயிற்றுவித்தப்பதற்கு இப்பள்ளிக்கு ஆசிரியர்களும், முதல்வரும் உள்ளனர்.

மாணவர் சேர்க்கை[தொகு]

10 முதல் 11 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகள் பொது நுழைவுத் தேர்வு, உடல் தகுதி, மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்காணல் மூலம் 6-ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.[4] +2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.[5]

இட ஒதுக்கீடு[தொகு]

  • இப்பள்ளியில் 200 இடங்களில் 70% இடங்கள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. பத்து இடங்கள் போரில் உயிர் இழந்த இராணுவத்தினர் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதியுள்ள இடங்கள் பொதுமக்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கல்வி முறை[தொகு]

கல்விக் கூட வளாகம்

இப்பள்ளியானது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறைகள் கொண்டது. மாணவர் ஆசிரியர் விகிதம் 10:1 என்ற அளவில் உள்ளது. ஒரு பாட நேரம் 40 நிமிடங்கள் கொண்டது.

இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், தேசிய மாணவர் படையிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]