முப்படைச் சேவைகளுக்கான தேர்வு வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்டியாளர் குழு மேற்கொள்ளும் சாகசப் பயிற்சி

முப்படைச் சேவைகளுக்கான தேர்வு வாரியம் (Services Selection Board (SSB) இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்குமான அதிகாரிகளை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்துத் தேர்வு மற்றும் 5 நாட்கள் கொண்ட சிந்திக்கும் ஆற்றல், உடனடியாக முடிவுகள் எடுக்கும் ஆற்றல், உடல் தகுதி மற்றும் நேர்காணல் போட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது. இந்தியா முழுவதும் தேர்வு வாரியத்தின் 13 மையங்கள் செயல்படுகிறது.

இதன் போட்டித் தேர்வு எழதுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி மேனிலைப் பள்ளி (+2) தேர்ச்சி ஆகும். தேசிய மாணவர் படையில் சி சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் மருத்துவம் தவிர்த்த பிற தொழில் நுட்பக் கல்வியில் பட்டயப் படிப்பு அல்லது பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வின்றி நேரடியாக 5 நாட்கள் கொண்ட தகுதித் சுற்றில் கலந்து கொள்ளலாம். மனம், வாக்கு மற்றும் செயல் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையப் பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதே இதன் நோக்கமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]