இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்

ஆள்கூறுகள்: 11°00′29″N 76°58′57″E / 11.0080266°N 76.9823867°E / 11.0080266; 76.9823867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி (Air Force Administrative College (AFAC), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சூலூரில் அமைந்துள்ளது. இது இந்திய வான்படையின் பழைமையான பயிற்சி நிறுவனம் ஆகும்.[1]

வழங்கும் பயிற்சிகள்[தொகு]

இந்த கல்லூரி, வான்படை அதிகாரிகளுக்கு கீழ்கண்ட பயிற்சி படிப்புகள் வழங்குகிறது:[2]

  • நிர்வாகப் பணியாளருக்கு அடிப்படை பயிற்சி
  • நிர்வாக அதிகாரிகளுக்கு இடைநிலைப் பயிற்சி
  • அதிகாரிகளுக்கு அடிப்படை தொழிற் பயிற்சி
  • அதிகாரிகளுக்கு சிறப்பு தொழிற் பயிற்சி
  • வான் தொடர்பான சட்டப் படிப்புகள்

இக்கல்லூரி வானிலை தொடர்பான பயிற்சிகள் வழங்குகிறது:

  • வானிலை முன்னறிதல் தொடர்பான துவக்க நிலை படிப்பகள்
  • சிறப்பு வானிலைப் பயிற்சிப் படிப்புகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Air Force - AFAC". Archived from the original on 2011-10-28. Retrieved 2014-10-24.
  2. "IAF Career Website". Archived from the original on 2014-10-24. Retrieved 2014-10-24.

வெளி இணைப்புகள்[தொகு]