உள்ளடக்கத்துக்குச் செல்

சைல் இராணுவப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஷ்டிரிய இராணுவப் பள்ளி, சைல்
அமைவிடம்
சைல், சோலான் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்
இந்தியா
அமைவிடம்Latitude: 30° 58' 60 N, longitude: 77° 10' 60 E
தகவல்
வகைஇராணுவப் பள்ளி
குறிக்கோள்சீலம் பரம் பூஷணம்
(Character is the Greatest Virtue)
தொடக்கம்1922
பள்ளி மாவட்டம்சோலான், இமாச்சலப் பிரதேசம்
அதிகாரிமேஜர் யஷ்வந்த் சிங் ஜதௌன்
அதிபர்லெப். கர்ணல் எஸ் பி எஸ் சௌகான்
பள்ளித் தலைவர்இராணுவப் பயிற்சிகளுக்கான தலைமை இயக்குநர்
பணிக்குழாம்100
பீடம்20
தரங்கள்வகுப்புகள் 6-12
மாணவர்கள்300
Campus size1,550-ஏக்கர் (6.3 km2)
வளாக வகைஉண்டு உறைவிடப் பள்ளி (Boarding school)
நிறங்கள்வெளி நீலம் மற்றும் அடர் நீலம்         
இணைப்புசிபிஎஸ்சி
நிறுவனர்ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
விடுதிகள்நாளந்தா, தக்சசீலம், உஜ்ஜைன்
நாளந்தாசிவப்பு     
தக்சசீலம்பச்சை     
உஜ்ஜைன்நீலம்     
இணையம்

சைல் இராணுவப் பள்ளி (Chail Military School) இந்தியாவின் 5 இராணுவப் பள்ளிகளில் ஒன்றான இது இமாச்சலப் பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் உள்ள சைல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த உண்டு உறைவிடப்பள்ளியை 1922-இல் நிறுவ நிதியுதவி வழங்கியவர் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் ஆவார்.

சிபிஎஸ்சி பாடத்திட்ட முறையைக் கொண்ட இந்த உண்டு உறைவிட இராணுவப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் மாணவர்களை 6-ஆம் வகுப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் டிசமபர் மாதத்தில் நுழைத்தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடல் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் பள்ளிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். [1] + 2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.[2]இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையில் இந்திய இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் போரில்/எல்லை மோதல்களில் இறந்த இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியானது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறைகள் கொண்டது. இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், தேசிய மாணவர் படையிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rashtriya Military Schools". 2 November 2009. Retrieved 22 June 2016.
  2. "Archived copy". Archived from the original on 7 February 2011. Retrieved 2012-07-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சைல்_இராணுவப்_பள்ளி&oldid=3710827" இலிருந்து மீள்விக்கப்பட்டது