தோல்பூர் இராணுவப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராஷ்டிரிய இராணுவப் பள்ளி, பெல்காம்
அமைவிடம்
தோல்பூர், இராஜஸ்தான்
இந்தியா
அமைவிடம்இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம்
தகவல்
வகைஇராணுவப் பள்ளி
குறிக்கோள்சீலம் பரம் பூஷணம்
(Character is the Highest Virtue)
தொடக்கம்1962
பள்ளி மாவட்டம்தோல்பூர்
பள்ளித் தலைவர்இராணுவ பயிற்சிக்கான தலைமை இயக்குநர்
பணிக்குழாம்100
பீடம்40
தரங்கள்வகுப்புகள் 6-12
மாணவர்கள்300
Campus typeஉண்டு, உறைவிடப் பள்ளி (Residential school)
நிறங்கள்வெளிர் நீலம் மற்றும் அடர் நீலம்         
இணைப்புசிபிஎஸ்சி
தகவல்Military establishment where young boys are trained to join Armed forces
இணையம்

தோல்பூர் இராணுவப் பள்ளி (Dholpur Military School) இந்தியாவின் 5 இராணுவப் பள்ளிகளில் ஒன்றாகும். தோல்பூர் இராணுவப் பள்ளி இராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. 1962-இல் நிறுவப்பட்ட இப்பள்ளியானது, இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இந்திய இராணுவ அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது.

சிபிஎஸ்சி பாடத்திட்ட முறை கொண்ட இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் மாணவர்களை 6-ஆம் வகுப்பில் சேர்வதற்கு, ஆண்டுதோறும் டிசமபர் மாதத்தில் நுழைத்தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடல் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் பள்ளிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். [1]

+ 2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.[2]இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையில் இந்திய இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியானது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறைகள் கொண்டது. இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், தேசிய மாணவர் படையிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rashtriya Military Schools" (2 November 2009). பார்த்த நாள் 22 June 2016.
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 7 February 2011 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]