உள்ளடக்கத்துக்குச் செல்

தோல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோல்பூர்
धौलपुर
தௌல்பூர்
நகரம்
இராணா உதயபானு சிங்கின் நினைவிடம்
இராணா உதயபானு சிங்கின் நினைவிடம்
அடைபெயர்(கள்): தாங்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
தோற்றுவித்தவர்தாவல் தேவ், 11-ஆம் நூற்றாண்டு
பரப்பளவு
 • நகரம்3,034 km2 (1,171 sq mi)
ஏற்றம்
177 m (581 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • நகரம்1,26,142
 • அடர்த்தி42/km2 (110/sq mi)
 • பெருநகர்1,33,229
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
328001
தொலைபேசி குறியிடு05642
வாகனப் பதிவுRJ 11
பாலின விகிதம்862 /
இணையதளம்dholpur.rajasthan.gov.in

தோல்பூர் (Dholpur), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கில் உள்ள தோல்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் சம்பல் ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரம், இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் தோல்பூர் சமஸ்தானத்தின் தலைநகரான இருந்தது. இந்நகரத்தில் தோல்பூர் இராணுவப் பள்ளி உள்ளது.

புவியியல்

[தொகு]

வடக்கில் 26° 42' 0" , கிழக்கில் 77° 54' 0" பாகையில் தோல்பூர் நகரம் உள்ளது. [3]

வரலாறு

[தொகு]

கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை சௌகான் இராசபுத்திர குலத்தினர் இந்நகரத்தை ஆண்டனர். கிபி 1050-இல் தோமர் குல மன்னர் தோலன் தேவின் வழித்தோன்றலான மன்னர் தவால் தேவ், தோல்பூர் நகரத்தை நிறுவினார். பின்னர் தோமர்கள் தோல்பூர் நகரத்தை கரௌலியின் யாதவகுல மன்னர்களிடம் இழந்தனர். கரௌலி யாதவ குல மன்னர் தரம்பால், கிபி 1120-இல் தோல்பூர் நகரத்தைச் சுற்றி கோட்டை கட்டினார். கிபி 1194-இல் கோரி முகமதுவிடம் இந்நகரம் சென்றது. பின்னர் இந்நகரம் தில்லி சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் ஆட்சிப் பகுதியில் இணைந்தது.

அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின், தோல்பூர் நகரத்தை இராஜா கல்யாண் சிங் குஜ்ஜர் கைப்பற்றி 1761 முடிய ஆண்டார். பின்னர் பரத்பூர் இராச்சிய ஜாட் மன்னர் சூரஜ்மால் தோல்பூர் நகரத்தை கைப்பற்றி 1947 முடிய ஆண்டார்.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தோல்பூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,33,229 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 862 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் ஆறுவயதிற்குட்ட குழந்தைகள் 17,510 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.56% ஆகவுள்ளது. [5] இந்நகரத்தில் இந்துக்கள் 105,771 (79.48 %), இசுலாமியர் 25,431 (19.11 %), பிறசமயத்தினர் 1.41% ஆகவுள்ளனர்.

தட்பவெப்பம்

[தொகு]

தோல்பூர் நகரத்தின் அதிகபட்ச கோடைக்கால வெப்பம் 40°C மேலாகவும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் பூஜ்ஜியம் பாகைக்கும் கீழாகவும் உள்ளது.[6]

தட்பவெப்ப நிலைத் தகவல், தோல்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.6
(90.7)
36.8
(98.2)
42.8
(109)
47.3
(117.1)
49.8
(121.6)
50.0
(122)
46.0
(114.8)
42.2
(108)
41.7
(107.1)
41.8
(107.2)
37.7
(99.9)
32.6
(90.7)
50.0
(122)
பதியப்பட்ட தாழ் °C (°F) -4.3
(24.3)
0.2
(32.4)
4.0
(39.2)
11.0
(51.8)
16.7
(62.1)
18.4
(65.1)
20.9
(69.6)
17.4
(63.3)
14.9
(58.8)
8.9
(48)
3.1
(37.6)
-3.3
(26.1)
−4.3
(24.3)
ஆதாரம்: India Meteorological Department[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (pdf). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  2. "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (pdf). Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
  3. Google. "maplandia.com". Google. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014. {{cite web}}: |author= has generic name (help)
  4. John Murray (Firm), Edward Backhouse Eastwick - Handbook of the Bengal Presidency, page 370
  5. Dhaulpur City Census 2011
  6. "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 2013-05-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  7. "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 2013-05-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dholpur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்பூர்&oldid=3759617" இலிருந்து மீள்விக்கப்பட்டது