நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
CBSE Logo.jpg
நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
உருவாக்கம் நவம்பர் 3, 1962 (1962-11-03) (55 ஆண்டுகளுக்கு முன்னர்)
வகை Governmental Board of School Education
தலைமையகம் புது தில்லி, இந்தியா
அமைவிடம்
 • C B S E

  Pragati House, 3rd Floor, 47-48, Nehru Place,

  New Delhi - 110019
ஆட்சி மொழி
இந்தி, ஆங்கிலம்
வலைத்தளம் www.cbse.nic.in

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education) என்பது இந்தியாவின் பள்ளி நிலைகளுக்கான மத்திய அரசாங்கத்தின் கல்வி வாரியம் ஆகும்.

வரலாறு[தொகு]

மேம்பாடுகளின் அடிசுவடுகள், பல ஆண்டுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாறுதல்கள் காரணமாக வாரியம் தற்போதைய நிலையை அடைந்தது. உ.பி உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி வாரியம் என்பதே 1921 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் வாரியம் ஆகும். ராஜ்பட்னா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகியவை இதன் அதிகார எல்லையின் கீழ் இருந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட மாகாணங்களின் அரசாங்கம் மூலமாக உருவாக்கப்பட்ட பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக, 1929 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய அரசாங்கம் அனைத்துப் பகுதிகளுக்காகவும் இணைந்த வாரியத்தை அமைப்பதற்கு யோசனை கூறி, இதற்கு உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக்கல்வி வாரியம் ராஜ்பட்னா எனப் பெயரிடப்பட்டது. அஜ்மீர், மீர்வாரா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளை இந்த வாரியம் உள்ளடக்கியிருந்தது.

கல்வி நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் தரநிலையை வழங்குவதில் நடுநிலைக் கல்வி நிலைகளின் அபரிதமான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு இந்த வாரியம் சாட்சியாக இருந்தது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில வாரியங்களின் வருகையுடன், அஜ்மீர், போபால் மற்றும் பின்னர் விந்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் மட்டுமே வாரியத்தின் அதிகார எல்லை வரம்பேற்படுத்தப்பட்டிருந்தது. இதன் முடிவாக, 1952 ஆம் ஆண்டு, வாரியத்தின் அமைப்பானது பகுதி-சி மற்றும் பகுதி-டி பிரதேசங்களுக்கு அதன் அதிகார எல்லை விரிவுபடுத்தப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு, அந்த வாரியத்திற்கு அதன் தற்போதைய ‘நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு, முடிவாக வாரியம் மீண்டும் புதிதாய் அமைக்கப்பட்டது. இதன் முக்கியக் குறிக்கோள்கள் ஆவன: கல்வி நிலையங்களை மிகவும் பயனுள்ள முறையில் நடத்துவது, மத்திய அரசாங்கம் மற்றும் அடிக்கடி பணிகள் மாற்றியமைக்கப்படும் பணிகளில் இருக்கும் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவை இதில் அடக்கமாகும்.

அதிகார எல்லை[தொகு]

வாரியத்தின் அதிகார எல்லையானது தேசத்தின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது. வாரியம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதன் விளைவாக, முந்தைய 'தில்லி இடைநிலைக்கல்வி வாரியம்’ மத்திய வாரியத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. எனவே மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக அனைத்து கல்வி நிலையங்களும் தில்லி வாரியத்தின் மூலமாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்குப் பின், அனைத்துப் பள்ளிகளும் சண்டிகார் ஒன்றியத்து ஆட்சிப் பரப்பில் நிறுவப்பட்டது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலம் மற்றும் தற்போதைய ஜார்கண்ட், உத்திராஞ்சல் மற்றும் சண்டிகார் ஆகிய பிரதேசங்களும் வாரியத்துடன் இணைக்கப்பட்டன. 1962 ஆம் ஆண்டு 309 பள்ளிகளைக் கொண்டிருந்த வாரியம், இன்று 21 நாடுகளின் 141 பள்ளிகள் உள்ளிட்ட 31-03-2007 தேதிக்கு 8979 பள்ளிகளைக் கொண்டிருக்கிறது. 897 கேந்திரா விந்தியாலயங்கள், 1761 அரசாங்கப் பள்ளிகள், 5827 சார்பற்ற பள்ளிகள், 480 ஜவஹர் நோவோதயா வித்தியாலயங்கள் மற்றும் 14 மத்திய திபெத்தியப் பள்ளிகள் வாரியத்தில் உள்ளன.

முக்கிய நடவடிக்கைகள் மற்றும் குறிக்கோள்கள்[தொகு]

குறிப்பிடத்தக்க உள் இணைக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது:

 • 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவில் தேர்வுகளின் விதிமுறைகளைக் குறிப்பிடுவதற்கு, மற்றும் பொதுத் தேர்வை நடத்துவதற்காக
 • இணைக்கப்பட்ட பள்ளிகளில் வெற்றிகரமாகத் தேர்வு எழுதுபவர்களுக்கு தகுதிபெற்ற சான்றிதழ்களை வழங்குவதற்காக.
 • பணி மாற்றங்களைக் கொண்டிருக்கும் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களுக்கு கல்வித் தேவைகளை முழுமையாக்குவதற்காக.
 • தேர்வுகளின் பயிற்சி வகுப்பு ஆணைகளைக் குறிப்பிடுவதற்காகவும், தெரிவிப்பதற்காகவும்
 • தேர்வின் நோக்கத்தை இணைக்கப்பட்ட கல்வி நிலையங்களுக்குத் தெரிவிக்கவும், நாட்டின் கல்வித் தரங்களை உயர்த்துவதும் இதன் நோக்கமாகும்.

வாரியத்தின் முதன்மை நோக்கம்[தொகு]

 • மாணவர்களை நட்பார்ந்த முறையில் நடத்துவதும், மாணவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட முன் உதாரணமாக விளங்குவதற்காகவும் கற்பிக்கும்-கற்றல் செயல்முறைகளில் புதுமைகள்.
 • தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு பயிற்சிகளில் சீரமைத்தல்கள்.
 • பணி-சார்ந்த மற்றும் பணி-இணைக்கப்பட்ட உள்ளீடுகளை சேர்ப்பதன் மூலமான திறன் கற்றல்.
 • சேவைப் பயிற்சித் திட்டங்கள், பயிலரங்குகள் மற்றும் பலவற்றை நடத்துவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் கல்வித் திறன்களை நிலையாக்குதல்.

பன்முகப்படுத்தல்[தொகு]

இதன் செயல்பாடுகளை பயனுள்ள முறையில் வெளிப்படுத்துவதற்கு, நாட்டின் பல பகுதிகளில் வாரியம் மூலமாக வட்டார அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் இணைக்கப்பெற்ற பள்ளிகளுக்கு அதிக ஏற்புத்தன்மை கிடைக்கும். அலகாபாத், அஜ்மீர், சென்னை, குவாஹாத்தி, பஞ்சுகுலா மற்றும் தில்லி ஆகியப் பகுதிகளின் வாரியத்தின் வட்டார அலுவலங்கள் அமைந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள பள்ளிகள், தில்லி வட்டார அலுவலகம் மூலமாக கவனிக்கப்பட்டு வருகிறது. CBSE இன் வட்டார அலுவலகங்களுடைய அதிகார எல்லையின் முழு விவரங்களுக்கு [1] ஐப் பார்க்கவும். இதன் தலைமையகமானது, வட்டார அலுவலகங்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. எனினும், வட்டார அலுவலங்களுக்கு போதுமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொள்கைகளை ஈடுபடுத்தி சிக்கல்கள் ஏற்பட்டாலும், தலைமை அலுவலகத்தில் அவை குறிப்பிடப்படுகின்றன. தினசரி நிர்வாகம், பள்ளிகளுடன் தொடர்பு, தேர்வுகளுக்கான முந்தைய மற்றும் பிந்தைய ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கொண்ட பொருள்கள் அனைத்தும் குறிப்பிட்ட வட்டார அலுவலங்கள் மூலமாகக் கையாளப்படுகின்றன.

நிர்வாக அமைப்பு[தொகு]

செயலர் கல்வி, இந்திய அரசாங்கம், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடன் உரிமை கொள்ளப்பட்ட கட்டுப்படுத்தும் ஆணையத்தின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் இந்த வாரியம் செயல்படுகிறது. இயற்கையாக ஆலோசனை கூறும் பல்வேறு சட்டப்படியான செயற்குழுக்களையும் இந்த வாரியம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் வாரியத்தின் நிர்வாகக் குழு நிறுவப்பட்டுள்ளது. வாரியத்தின் நிர்வாகக்குழுவிற்கு முன்பாக ஒப்புதலுக்காக அனைத்து செயற்குழுக்களின் பரிந்துரைகளும் வைக்கப்படும்.

வாரியத்தின் அமைப்புமுறை[தொகு]

வாரியத்தலைவர் என்பவர் செயலாளர், (கல்வி சார்ந்த) இயக்குனர், தேர்வுகளின் கட்டுப்பாட்டு அலுவலர், HOD (எடுசாட் (Edusat), R&D மற்றும் தொழில்முறைக் கல்வி) மற்றும் HOD (சிறப்புத் தேர்வுகள்., செயல்திட்டங்கள் & பயிற்சி) ஆகிய ஐந்து துறைத் தலைவர்களின் உதவி பெற்ற வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் ஆவார். செயலாளர் (கல்வி), மனித வள மேம்பாட்டு அமைச்சகம், வாரியத்தைக் கட்டுப்படுத்தும் ஆணையமாக இந்திய அரசாங்கம் ஆகியோர் வாரியத் தலைவர் மற்றும் துறைத் தலைவர்களை நியமிக்கின்றனர்.

செயலாளர் CBSE என்பது தலைமை நிர்வாகம் சார்ந்த அலுவலர் ஆவார். நிர்வாகம், கணக்காய்வு மற்றும் கணக்குகள், மக்கள் தொடர்பு, பள்ளிகளை இணைப்பதற்கான சட்டம் வழங்குதல் ஆகியவற்றை சார்ந்த பொருள்களுக்கு இவர் பொறுப்பாவார்.

(கல்வி சார்ந்த) இயக்குனர், கல்வி சார்ந்த அலகின் தலைவர் ஆவார். நடுநிலை மற்றும் மூத்த நடுநிலைகளில் கல்வி சார்ந்த தொழில் முறை சந்திப்புகளின் அனைத்து பாடங்களைக் கொண்ட பாடத்திட்டத்தை உருவாக்குவது, ஆசிரியர் பயிற்சிப் பயிலரங்குகளை உருவாக்குவது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வழிகாட்டுதலுக்காக ஆதரவுப் பாடங்களை உருவாக்குவது, நடுநிலை மற்றும் மூத்த நடுநிலை வகுப்புகளுக்காக பாடநூல்களை வெளியிடுவது, கல்விசார்ந்த செயல்திட்டங்களை கண்காணிப்பது ஆகியவை இந்த அலகின் முக்கிய செயல்பாடுகளாக உள்ளன.

தேர்வுகள் மற்றும் தேர்வுகளின் நிர்வாகம், தேர்வுக்கு முந்தைய மற்றும் பிந்தைய பணியின் முக்கியப் பகுதிகள், வருடாந்திர நடுநிலை மற்றும் மூத்த பள்ளி சான்றிதழ் தேர்வுகளை நடத்தும் வட்டார அலுவலகங்களுடன் ஒருங்கிணைவு மற்றும் அனைத்து இந்திய முன்-மருத்துவ/முன்-பல் மருத்துவ நுழைவுத் தேர்வு ஆகிய அனைத்து விஷயங்களுக்கும் கல்வித் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பேற்கிறார்.

ISRO மூலமாக தொடங்கப்பட்ட கல்வி செயற்கைக்கோள் வழியான தொலைதூரக்கல்வி மற்றும் தொழிற்துறைப் பாடத்திட்டங்களின் வடிவமைப்பு ஆகிய அனைத்து விஷயங்களுக்கும் HOD (எடுசாட், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் தொழில்முறைக் கல்வி) பொறுப்பாவார்.

அனைத்து இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுகளைப் பற்றிய அனைத்து விஷயங்களுக்கும் HOD (சிறப்புத் தேர்வுகள், செயல்திட்டங்கள் & பயிற்சி) பொறுப்பாவார்.

இணைப்புகள்[தொகு]

அனைத்து ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள், அனைத்து கேந்திரிய வித்யாலங்கள், தனியார் பள்ளிகள், தில்லியில் NCT இன் அனைத்து பள்ளிகள் மற்றும் வெளிநாட்டுப் பள்ளிகள் ஆகியவை CBSE இல் இணைந்துள்ளது.

தேர்வுகள்[தொகு]

ஒவ்வொரு வசந்த காலத்திலும் இறுதித் தேர்வுகளை வாரியம் நடத்துகிறது: 10 ஆம் வகுப்பிற்கான நடுநிலைப் பள்ளித் தேர்வு (AISSE) மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான அனைத்து இந்திய மூத்தப் பள்ளி சான்றிதழ் தேர்வு (AISSCE) ஆகியத் தேர்வுகளை நடத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகளில் பொறியியல் மற்றும் கட்டடக்கலைக்கான இளங்கலைப் பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கைக்கு ஏ.ஐ.இ.இ.இ (AIEEE) தேர்வை ஆண்டுதோறும் இந்த வாரியம் நடத்தி வருகிறது.

வட்டார அலுவலகங்கள்[தொகு]

தற்போது CBSE எட்டு வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது:

சமசுகிருத வாரம்[தொகு]

இந்த வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்விநிலையங்களும் ஆகத்து 7 முதல் 14 வரை சமசுகிருத வாரம் கொண்டாடுமாறு சூன்30, 2014 அன்று ஆணையிடப்பட்டது.[1] இந்த வாரத்தில் சமசுகிருதம் தொடர்புள்ள பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை நடத்திட பள்ளி முதல்வர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இதற்கான சுற்றறிக்கையில் இம்மொழியின் பண்பாட்டுக் கூறுகளையும் மற்ற இந்திய மொழிகளுடான பிணைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தவும் பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.[2]

சமசுகிருதம் இந்து சமய உரைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், இந்த ஆணை இந்தியாவின் சமயச்சார்பற்ற பன்முகத்திற்கு எதிராக இம்மொழியை மற்ற சமயத்தினர் மீது திணிப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.[3] தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இது வடமொழியைத் திணிப்பதற்கான ஓர் நடவடிக்கை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.[4] இதனை எதிர்த்து மாநில முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.[5] இந்த ஆணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு போடப்பட்டது; சூலை 30, 2014 அன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.[6] இதனையடுத்து சமசுகிருத வாரம் கொண்டாடுவதை எதிர்த்து ஆகத்து 5, 2014 அன்று சென்னையில் உள்ள நடுவண் கல்விநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.[7] இதன் காரணமாக நடுவண் இடைநிலைக் கல்வி பள்ளிகளுக்கு காவல்துறைப் பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புதவிகள்[தொகு]

http://www.cbse.nic.in/aboutus.htm

புற இணைப்புகள்[தொகு]