உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by TNSE Mahalingam VNR

தலைப்பு "நடுநிலைக் கல்விக்கான மத்திய வாரியம்" என்று இருக்க வேண்டுமோ? மயூரநாதன் 02:33, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply

நீங்கள் சொல்வதுபோல, கட்டுரையின் தலைப்பு "நடுநிலைக் கல்விக்கான மத்திய வாரியம்" என்று இருப்பதே சரியான மொழிபெயர்ப்பு. --George46 04:54, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply

தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள சொற்கள்:

  • Primary school = தொடக்கப் பள்ளி
  • Middle school = இடைநிலைப் பள்ளி
  • High school = உயர்நிலைப் பள்ளி
  • Higher secondary school = மேல்நிலைப் பள்ளி

எனவே, central board of secondary education என்பதை உயர்நிலைப் பள்ளிக்கல்விக்கான நடுவண் வாரியம் என மொழிபெயர்க்கலாம்--ரவி 10:04, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply

  • ரவி, தமிழ்நாட்டில் Middle school = இடைநிலைப் பள்ளி என்று அழைக்கப்படுவதில்லை. நடுநிலைப்பள்ளி என்றுதான் அழைக்கப்படுகிறது. --Theni.M.Subramani 16:28, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply
மத்திய வாரிய நடுநிலைக் கல்வி என்ற தலைப்பை விட நடுவன் இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்பது சரியாக இருக்கலாம். என்னுடைய Secondary School Cumulative Record Book (SSLC Book) என்பதற்கு இடைநிலைப் பள்ளித் திரள் பதிவேடு என்று தமிழில் உள்ளது எனவே நடுநிலை என்பதற்குப் பதிலாக இடைநிலை என்றே பயன்படுத்தலாம். --Theni.M.Subramani 13:03, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply
Central என்பது இங்கே Board என்பதைக் குறித்துத்தான் வருகிறது. எனவே "மத்திய வாரியம்" அல்லது "மைய வாரியம்" அல்லது "நடுவண் வாரியம்" (?) என்று வரவேண்டும். எனவே "இடைநிலைக் கல்விக்கான மத்திய வாரியம்" அல்லது "இடைநிலைக் கல்விக்கான நடுவண் வாரியம்" என்பது போல்தான் வரவேண்டும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 16:28, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply
ஆங்கிலச் சொல் Central என்பது Secondary Education Board முழுமையும் குறித்தே வருகிறது (எதிராக State Secondary Education Board..).ஆகவே விரிவாக குறிப்பிடுவதற்கு மாற்றாக தேனி சுப்பிரமணி கூறுவதுபோல நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் என்றே தலைப்பிடலாம்.(மாநில அளவில் மாநில இடைநிலைக் கல்வி வாரியம்) --மணியன் 17:10, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply
கூடுதலாக இவ்வாரியத்தின் இந்தி பெயர் கேந்திரிய மாத்யமிக் சிக்ஷா போர்ட் இவ்வாறே அமைந்துள்ளது.--மணியன் 17:34, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply
மணியன் தந்துள்ள நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் சிறந்ததாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 23:20, 24 ஏப்ரல் 2010 (UTC)Reply
@Gowtham Sampath:, கட்டுரை முழுவதுமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரை என்ற வார்ப்புருவை நீக்குவது தொடர்பாக நிர்வாகிகள் முடிவு செய்யலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:25, 3 மார்ச் 2019 (UTC)Reply

@TNSE Mahalingam VNR: திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை எனும் வார்ப்புருவில் உங்களது பெயரைச் சேர்த்துள்ளேன். நன்றி . ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:40, 3 ஏப்பிரல் 2024 (UTC)