இந்தியா-பாகிஸ்தான் போர், 1947

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர் நிறுத்தத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீரின் வரைபடம், 31 டிசம்பர் 1948

இந்தியா-பாகிஸ்தான் போர் அல்லது முதலாம் காஷ்மீர் போர் 1947-1948ல் ஜம்மு காஷமீர் இராச்சியத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக, இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது.[1] புதிதாக சுதந்திரம் பெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான நான்கு இந்திய-பாகிஸ்தான் போர்களுள் முதலாவது போர் இதுதான். காஷ்மீரை கைப்பற்றுவதற்கான முயற்சியில் சுதந்திரம் அடைந்த பாகிஸ்தான், பழங்குடி பஷ்தூன் மக்கள் மூலம் போரினை தூண்டிவிட்டனர்.[2] பூஞ்ச் நகரில் தனது முஸ்லீம் மக்களால், மஹாராஜா ஹரி சிங் எழுச்சியை எதிர்கொண்டார். மேலும் தனது இராஜ்யத்தின் மேற்கு மாவட்டங்களின் கட்டுப்பாட்டை இழந்தார். 22 அக்டோபர் 1947 அன்று, பாகிஸ்தானின் பஷ்தூன் மக்கள், எல்லையை கடந்து ஜம்மு காஷ்மீரில் புகுந்தனர்.பஷ்தூன் மக்கள் மற்றும் பாக்கிஸ்தான் படையினர் ஸ்ரீநகரை தங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர், ஆனால் அவர்கள் பாரமுல்லாவை அடைந்தபோது மக்களின் செல்வங்களை கொள்ளையடித்தனர். எனவே உதவிக்காக மஹாராஜா ஹரி சிங் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார், இந்தியாவும் உதவி வழங்கியது.

போரின் கட்டங்கள்[தொகு]

ஆரம்ப படையெடுப்புகள்[தொகு]

போரின் முதல் மோதல் 3-4 அக்டோபரில் தோரார் எனும் இடத்தில் ஏற்பட்டது. அக்டோபர் 22 அன்று முசாஃபாபாத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது.முசாஃபராபாத் மற்றும் டோம்லைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்ட அரசுப் படைகள் விரைவில் பழங்குடியினப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன.அவர்களில் பல பாக்கிஸ்தானிய ராணுவ வீரர்கள் பழங்குடி மக்களைப் போல இருந்தனர். ஸ்ரீநகரை நோக்கி முன்னேறுவதற்குப் பதிலாக, எல்லைப் பகுதியில் உள்ள கைப்பற்றப்பட்ட நகரங்களில் ஆக்கிரமிப்புப் படையினர், மக்களிடம் சூறையாடல்களையும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பூஞ்ச் பள்ளத்தாக்கில், மாநிலப் படைகள் முற்றுகையிடப்பட்ட ஊர்களுக்குள் பின்வாங்கின.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த நடவடிக்கை[தொகு]

இந்தியா தன் படைகளையும் ஆயுதங்களியும் ரஞ்சித் ராயின் தலைமையில் ஸ்ரீநகர் அனுப்பினர். அங்கே அவர்கள் சுதேச அரசியலமைப்பை வலுப்படுத்தி, பாதுகாப்பு எல்லையை நிறுவி, நகரின் புறநகர்ப் பகுதியில் பழங்குடிப் படைகளை தோற்கடித்தனர்.ஆரம்ப பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கவை:பாட்காம் நகரை பாதுகாப்பதில் கடுமையான எதிர்ப்பைத் தாண்டி தலைநகர மற்றும் விமான தளத்தையும் பாதுகாத்தது ஆகும்.

முக்கிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள்[தொகு]

 • பூஞ்ச் நகரை இணைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையும் மிர்பூரின் வீழ்ச்சியும்
 • ஜாஞ்செர் வீழ்ச்சி மற்றும் நாவ்ஷெரா, ஊரி மீதானத் தாக்குதல்கள்
 • விஜய் நடவடிக்கை: ஜாஞ்செர் வீழ்ச்சிக்கு எதிர் தாக்குதல்
 • பைசன் நடவடிக்கை
 • ஈஸி நடவடிக்கை மற்றும் பூஞ்ச் இணைப்பு
 • குலாப் நடவடிக்கை
 • இரேஸ் நடவடிக்கை

இழப்புகள்[தொகு]

இந்தியா[தொகு]

 • 1,104 பேர் கொல்லப்பட்டனர்
 • 3,154 காயமடைந்தனர்

பாகிஸ்தான்[தொகு]

 • 6,000 பேர் கொல்லப்பட்டனர்
 • 14,000 காயமடைந்தனர்

விருதுகள்[தொகு]

போரில் காட்டிய வீரத்திற்கும் துணிச்சலான செயல்களுக்கு, பல வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் நாடுகளின் மிக உயர்ந்த இராணுவ விருதை பெற்றனர். இந்தியாவில் பரம் வீர் சக்ரா விருதும் பாகிஸ்தானில் நிஷான்-ஈ-ஹைதர் விருதும் வழங்கப்பட்டது.

இந்தியா[தொகு]

 • மேஜர் சோம்நாத் ஷர்மா (இறந்தவர்)
 • லான்ஸ் நாயிக் கரம் சிங்
 • இரண்டாவது லெப்டினன்ட் ராம ரோகாபா ரேன்
 • நாயிக் ஜது நத் சிங்
 • மேஜர் பிரூ சிங் ஷேக்காவத்

பாக்கிஸ்தான்[தொகு]

 • கேப்டன் முஹம்ம சர்வர்

போருக்கு பின்[தொகு]

 1. 1948-இல் மன்னர் ஹரி சிங் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் இராச்சியம் கலைக்கப்பட்டது.
 2. 1949ஆம் ஆண்டு ஐ. நா. அவை, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லையாக போர் நிறுத்தக் கோடு வரையறை செய்தது.
 3. 1972ஆம் ஆண்டில் சிம்லா ஒப்பந்தப்படி போர் நிறுத்த எல்லையே எல்லை கட்டுப்பாட்டு கோடாக மாறியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 • Ministry of Defence, Government of India. Operations in Jammu and Kashmir 1947–1948. (1987). Thomson Press (India) Limited, New Delhi. This is the Indian Official History.
 • Lamb, Alastair. Kashmir: A Disputed Legacy, 1846–1990. (1991). Roxford Books. ISBN 0-907129-06-4.
 • Praval, K.C. The Indian Army After Independence. (1993). Lancer International, ISBN 1-897829-45-0
 • Sen, Maj Gen L.P. Slender Was The Thread: The Kashmir confrontation 1947–1948. (1969). Orient Longmans Ltd, New Delhi.
 • Vas, Lt Gen. E. A. Without Baggage: A personal account of the Jammu and Kashmir Operations 1947–1949. (1987). Natraj Publishers Dehradun. ISBN 81-85019-09-6.