சிம்மவிஷ்ணு
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பல்லவர்கள் | |
பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
இடைக்காலப் பல்லவர்கள் | |
விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
கந்தவர்மன் I | வீரவர்மன் |
கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
புத்தவர்மன் | நந்திவர்மன் I |
விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
சிம்மவர்மன் III | |
பிற்காலப் பல்லவர்கள் | |
சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) | கிபி 630 - 668 |
மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
தந்திவர்மன் | கிபி 775 - 825 |
நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) | கிபி 850 - 882 |
கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
தொகு |
சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன் ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப் பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
ஆட்சிக்காலம்[தொகு]
சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் இதுவரை உறுதியாய் அறியப்படவில்லை. சமீபகால சாசன ஆராய்ச்சிகள் இக்காலம் கி.பி. 537 முதல் 570 வரையெனச் சான்றுறைக்கின்றன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்காலம் கி.பி. 575 முதல் 615 வரையென ஒரு சாரர் கருதுகின்றனர்.
இராச்சிய விரிவாக்கம்[தொகு]
சிம்மவிஷ்ணு முடியேற்ற காலத்தில் பல்லவ இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. தென்னிந்திய தீபகர்ப்பம் ஐந்து சாம்ராச்சியங்களாய் ஆளப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை பகுதிகள் பல்லவர் சோழர் பாண்டியர்களாலும், கேரளம் சேரர்களாலும், கர்நாடகம் சாளுக்கியர்களாலும் ஆளப்பட்டன. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சிம்மவிஷ்ணு சோழர், சேரர், பாண்டியர்களை ஒடுக்கி காஞ்சியை தலைநகராய்க் கொண்டு பல்லவ இராச்சியத்தை பரப்பினான். இதன் பின்னர் அமைந்த பல்லவ வம்சாவளியே பிற்காலப் பல்லவர் என அறியப்படுகின்றனர். இரு நூற்றாண்டுகள் நீடித்த, பலப்போர்களுக்கு காரணமான பல்லவ-சாளுக்கிய பகைமை தொடங்கியதும் சிம்மவிஷ்ணுவின் காலத்தில்தான்.
சமயச் சார்பு[தொகு]
சிம்மவிஷ்ணு விஷ்ணு பக்தனாவான், அதனின் அவன் வைணவத்தை பின்பற்றினான் என அறியலாம். இது குறிப்பிடத்தக்கது ஏனெனில் இவன் மகன் மகேந்திரவர்மன் முதலில் சமண மதத்தை பின்பற்றி பின்னரே சைவத்திற்கு மாற்றப்பட்டான். மகாபலிபுரத்தில் உள்ள ஆதிவராகர் குடைவறைக் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் சிற்பத்தை காணலாம்.
முடித்தொடர்ச்சி[தொகு]
சிம்மவிஷ்ணுவிற்குப் பின் அவன் மகனும் புகழ்பெற்ற பல்லவ அரசர்களில் ஒருவனுமான மகேந்திரவர்மன் முடியேற்றான்.
ஆதாரங்கள்[தொகு]
- Mahendravarman I Pallava: Artist and Patron of Mamallapuram by Marilyn Hirsh, Artibus Asiae, Vol. 48, No. 1/2. (1987), pp. 113