திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அந்தகபுரம், திருக்கோவலூர்
அமைவிடம்
ஊர்:திருக்கோவிலூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரட்டேசுவரர்
உற்சவர்:அந்தகாசுர வத மூர்த்தி
தாயார்:பெரியநாயகி (சிவானந்த வல்லி)
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:தென்பெண்ணை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், சுந்தரர், சம்பந்தர்

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் ஊரில் கீழூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

தலச்சிறப்பு[தொகு]

  • கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் அவ்வையும், கபிலரும் திருமணம் செய்து வைத்த தலம்

இறைவன், இறைவி[தொகு]

இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர், தாயார் பெரியநாயகி.

தலவரலாறு[தொகு]

அந்தாகசூரன் எனும் அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடைபெறும் பொழுது அசுரனின் குருதியிலிருந்து அசுரர்கள் தோற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தடுப்பதற்காக சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கினார். அறியாமை எனும் இருளான அந்தாகசூரனை அழித்து சிவபெருமான் வீரட்டேஸ்வரராக மெய்ஞானத்தினை அருளிய தலம்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்