திருத்துறையூர் சிஷ்டகுருநாதர்சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு சிஸ்டகுருநாதர்சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:மெயின் ரோடு, திருத்துறையூர், பண்ருட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பண்ருட்டி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:சிஷ்டகுருநாதர்
தாயார்:சிவலோகநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:சதயம் - அப்பர் குருபூஜை, சுவாதி - சுந்தரர் குருபூஜை
வரலாறு
கட்டிய நாள்:எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருத்துறையூர் சிஸ்டகுருநாதர்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், திருத்துறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.[2]

வரலாறு[தொகு]

இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சிஷ்டகுருநாதர், சிவலோகநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகர், கெஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சதயம் - அப்பர் குருபூஜை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் சுவாதி - சுந்தரர் குருபூஜை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பெப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.