திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநாவலூர் |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர் |
தாயார்: | மனோன்மணியம்மை, சுந்தராம்பிகை, சுந்தரநாயகி |
தல விருட்சம்: | நாவல் |
தீர்த்தம்: | கோமுகி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]
பொருளடக்கம்
அமைவிடம்[தொகு]
இது விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.
சிறப்பு[தொகு]
அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்).
இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடையநாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.[2]