சைவ நெறி இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சைவ நூல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவ சமயத்தினைப் பற்றிய இலக்கியங்கள் சைவ நெறி இலக்கியங்களாகும். இவை சைவ நெறிப் பற்றியும், சிவபெருமான் பற்றியும் புகழ்ந்து பாடவும், சைவ நெறியை பரப்பவும் இயற்றப்பட்டன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிற்றிலக்கியம், பெருங்காப்பியம், சைவப் பனுவல்கள் என்று பல சைவ இலக்கியங்கள் இயற்றப்பட்டன. கி.பி. 650 காலப்பகுதி தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே ஆட்சி செய்தது என முனைவர் இரா.செல்வகணபதி குறிப்பிடுகிறார். [1]

ஔவையார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், உலகநாதர், நாயன்மார்கள், நால்வர் போன்றோர் சைவ சமயத்தின் பெரும் நூல்கள் இயற்றியவர்கள்.

திருமுறை சார்ந்த நூல்கள்[தொகு]

பல்லவர் காலத்திலும், அதன் பிறகும் இயற்றப்பட்ட சைவ இலக்கியங்களின் தொகுப்பினை பன்னிரு திருமுறைகள் என்கிறோம். இந்த திருமுறையை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கிய நூல்கள் திருமுறை சார்ந்த நூல்களாக அறியப்படுகின்றன.

சைவ சித்தாந்த நூல்கள்[தொகு]

உந்தி களிறோ டுயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம்-வந்தஅருள் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று

எனும் வெண்பா மூலம் சைவ சிந்தாந்த நூல்கள் பதினான்கு என்பதை அறியலாம். [2]

பிற சைவ சித்தாந்த நூல்கள்[தொகு]

மொழிபெயர்ப்பு சைவ நூல்கள்[தொகு]

தல புராணங்கள்[தொகு]

வீரசைவ நூல்கள்[தொகு]

பொது சைவ நூல்கள்[தொகு]


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

1. சைவ இலக்கியங்களின் தொகுப்பு