வேதாந்த சூடாமணி
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், வீரசைவ சமயத்தவரும், கருநாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தின் கொள்ளேகால் தாலூகாவை சேர்ந்தவரும், கவிஞர் மற்றும் கன்னட மொழியில் ஒரு சிறந்த எழுத்தாளருமான நிஜகுண யோகீசுவரர் கன்னட மொழியில் அருளிச் செய்த விவேக சிந்தாமணியிலுள்ள வேதாந்த பரிச்சேதத்தை துறைமங்கல சிவப்பிரகாச சுவாமிகளால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் மொழிச் செய்யுளில் அருளிய வேதாந்த சூடாமணி ஒரு ஏகாத்மவாத நூல். திருப்பூவண மடாதிபதி ஸ்ரீ காசிகானந்த ஞானாச்சாரிய சுவாமிகளால் பதிப்பிக்கப் பெற்ற இந்நூல் ஆன்மா ஒன்றே அழிவில்லாதது என்னும் அடிப்படைக் கொள்கையை எடுத்து விளக்குகிறது.
நூலின் சிறப்பு
[தொகு]தமிழ்நாடு அரசின் தமிழிணைய கல்விக் கழகத்தின் ஒரு பிரிவான தமிழிணையம்-மின்னூலகம் 92 பக்கங்களுடைய இந்நூலை கையடக்க ஆவண வடிவமைப்பில் அரிய நூல்கள் என்ற பகுப்பின் கீழ் 26 ஏப்ரல் 2018 அன்று பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது[1]. இந்நூலின் மூல ஆவணத்தின் இருப்பிடம் தஞ்சை சரசுவதிமகால் நூலகம் ஆகும்.
இந்நூலின் மற்றொரு பதிப்பு வேதாந்த சூடாமணி மூலமும் பிரம்மானந்த விளக்கமென்னும் உரையும் என்ற தலைப்பில் 1987-ஆவது ஆண்டில் வெளியிடப்பட்டது. இது கோவிலூர் ஆண்டவர் நூலகத்தால் பொது உரிமைப் பரப்பு அடிப்படையில் இணைய ஆவணகத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய இயலும். இந்நூலானது வேதாந்த சூடாமணி மூலம் மற்றும் கோவிலூர் மடம் திருக்களர் ஸ்ரீ வீரகேசர ஞானதேசிக சுவாமிகளின் சீடராகிய பொன்னம்பல ஞானதேசிக சுவாமிகளின் சீடரும் சாத்தூர் வேதாந்த மடத்தின் தலைவரும் ஆகிய பிரம்மானந்த சுவாமிகள் இயற்றிய பிரம்மானந்த விளக்கம் என்னும் உரையும் உள்ளடங்கியதாகும். இந்நூல் கோவிலூர் மடாலய தலைவர் ஸ்ரீ காசி விசுவநாத ஞானதேசிக சுவாமிகளின் சொற்படிக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகளால் வெளியிடப்பெற்றது[2].
மேற்கோள்
[தொகு]- ↑ துறைமங்கலம், சிவப்பிரகாசர்; யோகீசுவரர், நிஜகுண (1987). வேதாந்த சூடாமணி (pdf). மதுரை: ஸ்ரீகாசிகாநந்த ஞானாச்சாரிய சுவாமிகள்.
{{cite book}}
: Invalid|url-access=2024-01-11
(help)CS1 maint: url-status (link) - ↑ துறைமங்கலம், சிவப்பிரகாசர்; சுவாமிகள், ஸ்ரீ பிரம்மானந்த (1987). வேதாந்த சூடாமணி மூலமும் பிரம்மானந்த விளக்கமென்னும் உரையும் (pdf). ஸ்ரீரங்கம்: ஸ்ரீபிரும்மானந்த சுவாமிகள் – via கோவிலூர் ஆண்டவர் நூலகம்.
{{cite book}}
: Invalid|url-access=2024-01-11
(help)CS1 maint: url-status (link)