உள்ளடக்கத்துக்குச் செல்

நெஞ்சுவிடு தூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெஞ்சு விடு தூது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நெஞ்சுவிடு தூது, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இது 14-ஆம் நூற்றாண்டில் சாலிவாகனம் 1233 (பொஊ 1311)[1] ஆம் ஆண்டில் பாடப்பட்டது. இந்நூலின் செய்யுள்கள் கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர், தனது ஞானாசிரியனைத் தலைவனாக நினைத்துத் தன்னைக் காதலியாகப் பாவித்துத் தனது மனதைத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வரத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலில் இறைவனைத் தலைவனாகப் பாவித்து எழுதப்பட்டுள்ளதால், இறைவனது பெருமைகளும், சைவ சித்தாந்த கொள்கைகளும் கூறப்படுகின்றன. அவருடைய இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை பற்றி எழுதப்பட்டுள்ளது.

பகுதிகள்

[தொகு]

மூன்று பகுதிகளாகக் காணத்தக்க இந் நூலின்

  • முதற்பகுதியில், இறைவன் இயல்பு, உயிரின் இயல்பு, தளைகளின் இயல்பு எனச் சைவ சித்தாந்தத்தின் உண்மைகளான இறைவன், உயிர், மலங்கள் ஆகியன பற்றிக் கூறப்பட்டுள்ளது.
  • இரண்டாம் பகுதியில் இறைவனுடைய நிலையை மலை, நாடு, ஆறு, ஊர், தார், குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை எனும் தசாங்கங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
  • மூன்றாம் பகுதியில் இறைவனது பெருமை, ஞானாசாரியன், குரு உபதேசம், அடையும் இடம் என்பவை தொடர்பில், பிற சமயங்களில் மயங்காது, சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நூலின் சிறப்பு

[தொகு]

இந்நூலின் இறுதி அங்கமாகத் தனி வெண்பா ஒன்றினை முழுக்கருத்தையும் விளக்கும் வகையில் நூலாசிரியர் அமைத்திருக்கின்றார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சீனி. வெங்கடசாமி, மயிலை (நவம்பர் 1927). "காலக் குறிப்பு". லக்ஷ்மி. Vol. 5, no. 2. மதராசு. p. 61.

உசாத்துணைகள்

[தொகு]
  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சுவிடு_தூது&oldid=4083958" இலிருந்து மீள்விக்கப்பட்டது