முத்தி நிச்சயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்தி நிச்சயம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தர் என்பவரால் எழுதப்பட்ட நூல். மறைஞான சம்பந்தர் முத்திநிலை என்னும் நூலை எழுதி ஆன்மானந்தவாதம் என்னும் தம் கொள்கையைப் பரப்ப முயன்றார். இந்தக் கொள்கையை மறுக்க எழுந்தது குருஞான சம்பந்தர் எழுதிய முத்தி நிச்சயம் என்னும் நூல். இதற்குப் பேருரை ஒன்றைக் குருஞான சம்பந்தரின் மாணாக்கர் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் எழுதியுள்ளார்.

ஆன்மானந்தவாதம் என்பது ஆன்மா பற்றி விளக்கும் ஒருவகைக் கோட்பாடு. [1] எல்லா ஆன்மாவும் உடலை விட்டுப் பிரிந்ததும் இறைவனிடம் சென்றுவிடும். அங்கே ஆனந்தமாக இருக்கும் என்று கூறுவது ஆன்மானந்தவாதம்.

ஆன்மா உடலோடு இருக்கும்போது செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுத்து செய்வினைப் பயனைத் துய்க்கும் என்பது ஆன்மானந்தவாதத்தை மறுப்பது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. உடலோடு ஒன்றியிருக்கும் உயிரை ஆன்மா என்பர். ஆன்மாவை யாரும் கண்டதில்லை. காணமுடியாத ஒன்று காணமுடியாத கடவுளிடம் இருப்பதாக எண்ணிப் பார்ப்பது ஒருவகைக் கோட்பாடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தி_நிச்சயம்&oldid=1763577" இலிருந்து மீள்விக்கப்பட்டது