திருவருட்பயன்
Appearance
சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு சாலிவாகனம் 1229 (பொஊ 1307).[1]
அதிகாரங்கள்
[தொகு]திருவருட் பயனின் அதிகாரங்கள் அவற்றின் உட் பொருள்களுக்கு ஏற்பப் பெயரிடப்பட்டுள்ளன. இவை,
- பதிமுது நிலை
- உயிரவை நிலை
- இருள்மல நிலை
- அருளது நிலை
- அருளுறு நிலை
- அறியு நிலை
- உயிர் விளக்கம்
- இன்புறு நிலை
- ஐந்தெழுத்தருள் நிலை
- அணைந்தோர் தன்மை
என்பனவாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ சீனி. வெங்கடசாமி, மயிலை (நவம்பர் 1927). "காலக் குறிப்பு". லக்ஷ்மி. Vol. 5, no. 2. மதராசு. p. 62.
உசாத்துணைகள்
[தொகு]- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
- உமாபதி சிவாச்சாரியார், திருவருட்பயன் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.