சைவ சித்தாந்த சாத்திரங்கள்
Appearance
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். தமிழர்களின் தொன்மை மிகுந்த தத்துவம் எனப் போற்றப்படுகின்ற இந்த சாத்திரங்கள் பற்றி ஜி.யூ.போப் அவர்கள் பாராட்டியுள்ளார். இவைகள் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டும், 13-ஆம் நூற்றாண்டில் நான்கும், 14-ஆம் நூற்றாண்டில் எட்டுமாகத் தோன்றின.பதினான்கு சாத்திரங்கள் எவை எவை என்பதை-
- 'உந்தி களிறு உயர்போதம் சிந்தியார்
- பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தவருட்
- பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு
- உண்மைநெறி சங்கற்பம் முற்று'
எனவரும் வென்பா குறிக்கும்.
பதினான்கு சாத்திரங்களும் அவற்றினை இயற்றியோர்களும் கீழே.
- திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
- திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
- சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
- சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
- இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
- உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
- சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்
- திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
- வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
- போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
- உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
- கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
- நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
- சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை நூல்கள்
[தொகு]- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
- தமிழிலக்கிய வரலாறு , ஜனகா பதிப்பகம்- 1997