திருவிரட்டை மணிமாலை
| நூலாசிரியர் | கபிலதேவ நாயனார் |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | சைவ சமய பக்தி இலக்கியம் (சிற்றிலக்கியம்) |
வெளியிடப்பட்ட நாள் | பத்தாம் நூற்றாண்டு |
திருவிரட்டைமணிமாலை என்பது காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற நூலாகும்.[1] இந்நூல் சைவ சமய பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது.[2][3] இந்நூல் தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான இரட்டைமணிமாலையைச் சேர்ந்ததாகும்.[1] காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் சிறப்புகளைப் புகழ்ந்து இந்நூலில் எழுதியுள்ளார். [1]
காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்றதும் அற்புதத் திருவந்தாதி எனும் நூலைப் படைத்தார். அதில் பேயுருவம் பெற்றதைப் பற்றி பாடியுள்ளார். அடுத்ததாக இறைவனின் புகழைத் திருவிரட்டை மணிமாலையில் குறிப்பிடுகிறார். [1]
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்பது சைவ சமயப் பன்னிரு திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஒரு தமிழ் பக்தி நூலாகும். இந்நூலை இயற்றியவர் கபிலதேவ நாயனார் ஆவார்.
பெயர்க் காரணம்
[தொகு]முத்து, பவளம் ஆகிய இருவேறு மணிகளை மாற்றி மாற்றிக் கோத்து மாலையாக்குவது போல, வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய இருவகைச் செய்யுட்களை மாறி மாறி வரும்படி அந்தாதித் தொடையமைப்பில் பாடியதால் இது 'இரட்டை மணிமாலை' எனப் பெயர் பெற்றது.
பாடல் அமைப்பு
[தொகு]இந்நூலில் மொத்தம் 37 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிவபெருமானின் வடிவழகையும், அவர்தம் கருணையையும், அருட்சிறப்பையும் போற்றிப் பாடும் பக்திப் பாடல்களாக இவை அமைந்துள்ளன.
பதினொன்றாம் திருமுறையில் பிற இரட்டை மணிமாலைகள்
[தொகு]பதினொன்றாம் திருமுறையில் இதே பெயரில் மேலும் இரு நூல்கள் உள்ளன:
- காரைக்கால் அம்மையார் பாடிய 'திருஇரட்டை மணிமாலை' (சிவபெருமான் மீது பாடப்பட்டது)
- கபிலதேவ நாயனாரே பாடிய 'மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை' (விநாயகர் மீது பாடப்பட்டது)
இதையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- 1 2 3 4 http://www.tamilvu.org/slet/l4330/l41C3uri.jsp?pglink=1112&pageno=880
- ↑ "11ம் திருமுறை - திருவாலங்காட்டு [[மூத்த திருப்பதிகம்]] - திருவிரட்டை மணிமாலை".
{{cite web}}: URL–wikilink conflict (help) - ↑ "2.3. திரு இரட்டை மணிமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்".