திருத்தொண்டர்மாலை
தி்ருத்தொண்டர்மாலை குமார பாரதியாரால் இயற்றப்பட்ட சைவ நெறி இலக்கிய நூலாகும். சிவபெருமான் வழங்கிய வேதங்கள் வடமொழியில் இருந்தமையால் திருவள்ளுவ நாயனார் குறட்பா வடிவில் அந்த வேதத்தினைத் தந்ததாகவும், அவ்வேதத்தின் உண்மையை உணர்ந்து வாழ்ந்து காட்டிய நாயன்மார்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் எண்ணத்துடன் குமாரபாரதியார் இந்த நூலை இயற்றியுள்ளதாகவும் அ.முத்துசாமி பிள்ளை அவர்கள் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். [1]
நூல் அமைப்பு
[தொகு]பாயிரம் தவிர்த்து இந்நூல் நூறு பாடல்களை கொண்டதாகும். தில்லைவாழந்தணர், திருநீலகண்டநாயனார், இயற்பகை நாயனார் என அனைத்து நாயன்மார்களின் வாழ்வியல் ஒழுக்கங்களை திருக்குறளோடு ஒப்புமை செய்து இந்த பாடல்கள் அமைந்துள்ளன.
திருக்குறள் உரை நூல்
[தொகு]உ.வே. சாமிநாத ஐயரின் கொள்கைப்படி திருக்குறளுக்கு ஒரு கதையோ, வரலாறோ உதாரணம் காட்டி இயற்றப்படும் பாடல்கள் "திருக்குறள் உரை நூல்களாகும்". அவ்வகையில் திருத்தொண்டர் மாலையும் திருக்குறளின் உரைநூலாகும். இதில் அறுபத்து மூவரான நாயன்மார்களின் வாழ்வியலைச் சுட்டி காண்பித்து குறளுக்கு விளக்கம் தருகிறார் குமார பாரதியார். மேலும் சில திருக்குறள் உரைநூல்கள் சினேந்திர வெண்பா, திருமலை வெண்பா, முதுமொழி மேல்வைப்பு, திருப்புல்லாணி மாலை, வள்ளுவர் நேரிசை, முருகேசர் முதுநெறி வெண்பா, திருக்குறட் குமரேச வெண்பா போன்றவை.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.shaivam.org/tamil/sta_thondar_malai.htm பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம் குமாரபாரதியார் இயற்றிய "திருத்தொண்டர்மாலை"