திருஈங்கோய்மலை எழுபது
Appearance
திருஈங்கோய்மலை எழுபது பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
ஈங்கோய் மலை சிவன்மீது பாடப்பட்ட 70 வெண்பாக்கள் கொண்டது இந்த நூல். இது நக்கீர தேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு.
இந்த நூலிலுள்ள பாடல்களில் அணிநலன்கள் மிகுதி.
48 முதல் 62 வரை உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.
- ஒரு பாடல்
- வழகிதழ் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
- முழுகியதென் றஞ்சிமுழு மந்தி – பழகி
- எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கள்
- கொழுந்தெழுந்த செஞ்சடையானெ குன்று. (பாடல் எண் 70)
- செய்தி
- வழுவழுப்பான காந்தள் மலரில் வண்டு அமர்ந்து தேனைப் பருகிக்கொண்டிருந்ததாம். அதைப் பார்த்த பெண்குரங்கு வண்டு தீயில் மூழ்கிவிட்டது எனக் கருதி தீ அணையட்டும் என்று எழுந்து எழுந்து தன் கையால் நெட்டிப்போட்டு சாபமிட்டுக்கொண்டிருந்ததாம். இப்படிப்பட்ட வளம் மிக்கது ஈங்கோய்மலை.
காலம் கணித்த கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005