உள்ளடக்கத்துக்குச் செல்

பதினோராம் திருமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

பதினோராம் திருமுறை என்பது சைவத் திருமுறை வைப்பினிலே காரைக்கால் அம்மையார் உட்பட் 12 அடியவர்கள் பாடிய பாடல்களை உள்ளடக்குகின்றது. இதில் நாற்பது பதிகங்கள் அடங்கியுள்ளன. இத் திருமுறை சைவப் பிரபந்த மாலை அல்லது சைவப் பிரபந்த திரட்டு என அழைக்கப்படுகின்றது.

பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்[தொகு]

பதினோராம் திருமுறையின் சிறப்புகள்[தொகு]

பதினோராம் திருமுறையின் முக்கிய சிறப்பியல்பாக கொள்ளப்படுவது இதில் 22 வகையான சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றது. சிற்றிலக்கிய வகைப்படி அவற்றின் பிரிப்பு;

  • சீட்டுக்கவி வகை இலக்கியம் ;(1)
   • திருமுகப்பாசுரம் - திரு ஆலவாய் உடையார்
  • பதிகம் வகை இலக்கியம்;(1)
   • திருவாலங்காட்டுத் திருப்பதிகம் - காரைக்கால் அம்மையார்
  • இரட்டை மணிமாலை வகை இலக்கியம்;(4)
   • திரு இரட்டை மணிமாலை - காரைக்கால் அம்மையார்
   • மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை - கபிலதேவ நாயனார்
   • சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - கபிலதேவ நாயனார்
   • திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை - நம்பியாண்டார் நம்பி
  • அந்தாதி வகை இலக்கியம்;(8)
   • அற்புதத்திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
   • பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமான் நாயனார்
   • கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - நக்கீர தேவ நாயனார்
   • சிவபெருமான் திருஅந்தாதி - கபில தேவர்
   • சிவபெருமான் திருஅந்தாதி - பரணதேவர்
   • திருவேகம்பமுடையார் திருவந்தாதி - பட்டினத்தார்
   • திருத் தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
   • ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
  • மும்மணிக்கோவை வகை இலக்கியம்;(7)
   • திருவலஞ் சுழி மும்மணிக்கோவை - நக்கீரதேவர்
   • திருவாரூர் மும்மணிக்கோவை - சேரமான் பெருமான்
   • மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை - அதிரா அடிகள்
   • திருக்கழுமல மும்மணிக்கோவை - பட்டினத்தார்
   • திருவிடை மருதூர் மும்மணிக்கோவை - பட்டினத்தார்
   • ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை - நம்பியாண்டார் நம்பி
   • சிவபெருமான் மும்மணிக்கோவை - இளம் பெருமான் அடிகள்
  • உலா வகை இலக்கியம்;(1)
   • திருக்கைலாய ஞானஉலா - சேரமான் பெருமான்
  • எழுபது வகை இலக்கியம்;(1)
   • திருஈங்கோய்மலை எழுபது - நக்கீரதேவர்
  • எழுகூற்றிருக்கை வகை இலக்கியம்;(1)
  • தேவபாணி வகை இலக்கியம்;(1)
   • பெருந்தேவபாணி - நக்கீரதேவர்
  • கோபப்பிரசாதம் வகை இலக்கியம்;(1)
   • கோபப் பிரசாதம் - நக்கீரதேவர்
  • கார் எட்டு வகை இலக்கியம்;(1)
   • கார் எட்டு - நக்கீரதேவர்
  • போற்றிக்கலிவெண்பா வகை இலக்கியம்;(1)
   • போற்றிக் கலிவெண்பா - நக்கீர தேவர்
  • ஆற்றுப்படை வகை இலக்கியம்;(1)
   • திருமுருகாற்றுப்படை - நக்கீரதேவர்
  • திருமறம் வகை இலக்கியம்;(2)
   • திருக்கண்ணப்ப தேவர் திருமறம் - நக்கீரதேவர்
   • திருக்கண்ணப்பதேவர் திருமறம் - கல்லாட தேவ நாயனார்
  • நான்மணி மாலை வகை இலக்கியம்;(1)
   • கோயில் நான்மணிமாலை - பட்டினத்தார்
  • ஒருபா ஒருபது வகை இலக்கியம்;(1)
   • திருவொற்றியூர் ஒருபா ஒருபது - பட்டினத்தார்
  • உலாமாலை வகை இலக்கியம்;(1)
   • ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
  • ஏகாதசமாலை வகை இலக்கியம்;(1)
   • திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை - நம்பியாண்டார் நம்பி
  • திருக்கலம்பகம் வகை இலக்கியம்;(1)
   • ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - நம்பியாண்டார் நம்பி
  • திருத்தொகை வகை இலக்கியம்;(1)
   • ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - நம்பியாண்டார் நம்பி
  • திருவிருத்தம் வகை இலக்கியம்;(2)
   • கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - நம்பியாண்டார் நம்பி
   • ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் - நம்பியாண்டார் நம்பி
  • திருவெண்பா வகை இலக்கியம்;(1)
   • சேத்திர வெண்பா - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

சிறு குறிப்புகள்[தொகு]

  • பதிகம் பாடியவர்களில் பெண்பால் புலவரான காரைக்காலம்மையாரின் பதிகங்கள் இத் திருமுறையில் அடங்கியுள்ளது.
  • நக்கீரதேவர் 10 வகையான சிற்றிலக்கிய பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு அடுத்ததாக நம்பியாண்டார் நம்பி 9 வ்கையான சிற்றிலக்கிய வகை பாடல்களை பாடியுள்ளார்.
  • சிவனை மட்டுமின்றி முருகப்பெருமானை முதன்மைப்படுத்தி பாடப்பெற்ற திருமுருகாற்றுப்படை (நக்கீரதேவர்),மற்றும் விநாயகரை முதன்மைபடுத்தும் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை (அதிராவடிகள்) என்பனவும் இத் திருமுறையில் அமையப்பெற்றுள்ளன.
  • திரு ஆலவாய் உடையார், கல்லாட தேவ நாயனார் ஆகியோர் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளனர்.
  • திருஞானசம்பந்த நாயனார்,கண்ணப்ப நாயனார்,திருநாவுக்கரசு நாயனார் ஆகியோரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பதிகங்களும் இத் திருமுறையினில் அடங்கியுள்ளன.
  • நக்கீர தேவரின் திருமுருகாற்றுப்படை சங்க இலக்கியங்களில் பத்துத்பாட்டில் ஒன்றாகவும் வருகின்றது ஆராயத்தக்கது.

உசாவு துணை நூல்[தொகு]

 • 'சைவ சமயக் கலைக் களஞ்சியம் (தோத்திரமும் சாத்திரமும்)'- முனைவர்.சிவ.திருச்சிற்றம்பலம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினோராம்_திருமுறை&oldid=3504792" இலிருந்து மீள்விக்கப்பட்டது