உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்வண்ணத்தந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்வண்ணம் என்று இந்த நூல் தொடங்குவதால் இதற்குப் பொன்வண்ணத்து அந்தாதி என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது.

நூலின் காலம் 650-710. இது சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட நூல். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன.

நூலின் முதல் பாடல்
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.

பொன்வண்ண மேனி. மின்வண்ணச் சடை, வெள்ளைநிறக் காளை ஆகியவற்றைக் கொண்டிருப்பவன் ஈசன். (இவற்றில் வியப்பு ஒன்றும் இல்லை) என் மனத்தின் வண்ணம் எப்போதெல்லாம் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியெல்லாம் காட்சி தருகிறானே! - இது பாடல் சொல்லும் செய்தி.

காலம் கணித்த கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005

[[பகுப்பு:பதினோராம் திருமு றை]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்வண்ணத்தந்தாதி&oldid=3461621" இலிருந்து மீள்விக்கப்பட்டது