போற்றித்திருக்கலிவெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போற்றித்திருக்கலிவெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் கலிவெண்பா என்பதும் ஒன்று.

10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீரதேவ நாயனார் இதன் ஆசிரியர். கலிவெண்பா என்னும் யாப்பால் சிவன் புகழை இந்த நூல் பாடுகிறது.

திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் – பருத்த
குறுந்தாள் நெடுமூக்கின் குன்றிக்கண் நீல
நிறத்தால் பொலிந்து நிலமே – லுறத்தாழ்ந்து
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதமலர்

எனத் தொடங்கிப் பாடல் ஓடுகிறது.

காளத்தி போற்றி கயிலைமலை போற்றியென
நீளத்தி னால்நினைந்து [1] நிற்பார்கள் – தாளத்தோ(டு)
எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.

எனக் கூறிப் பாடல் முடிகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. நீடுநினைந்து


காலம் கணித்த கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005