அகத்தியர் தேவார திரட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.[1]

தொன்மக் கதை[தொகு]

சமயக் குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8,262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன்படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.

இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர்

 • திருபிரமபுரம்
 • திருநீற்றுப்பதிகம்
 • பஞ்சாக்கர திருப்பதிகம்
 • நமசிவாய திருப்பதிகம்
 • திருஷேத்திர கோவை
 • திருவெழுகூற்றிருக்கை
 • திருக்கடவூர் மயானம்
 • திருவாழ்கொளிபுத்தூர்
 • திருப்பூந்திராய்
 • கோளறு பதிகம்

திருநாவுக்கரசர்

 • திருவதிகை வீரட்டானம்
 • நமசிவாய திருப்பதிகம்
 • திருஷேத்திர கோவை
 • கோயிற்றிறு விருத்தம்
 • திருப்பூவணம்
 • திருவதிகை வீரட்டானம்
 • திரு கயிலாயம்
 • திருவாரூர் திருவிருத்தம்

சுந்தரர்

 • திருவென்னைய்நல்லூர்
 • திருப்பாண்டிகொடுமுடி
 • ஊர்த்தொகை
 • திருக்கடவூர் மயானம்
 • திருப்புன்கூர்
 • திருக்கழுக்குன்றம்
 • திருத்தொண்டத்தொகை

விழா[தொகு]

திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயிலில் அகத்தியர் தேவார திரட்டு முற்றோதல் எனும் விழா நடைபெறுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. அகத்தியர் தேவாரத் திரட்டு-தினமலர் கோயில்கள்

2.யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர் 1983 ம் ஆண்டு வெளியிட்டுள்ள அகத்தியர் தேவார திரட்டு பதிப்பு

வெளி இணைப்புகள்[தொகு]