உள்ளடக்கத்துக்குச் செல்

திருவுந்தியார் (மாணிக்கவாசகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவுந்தியார் (மாணிக்க வாசகர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம் நூலில் திருவுந்தியார் [1] என்னும் தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. யாப்பிலக்கண வகையில் இந்தப் பாடல்களைக் கலித்தாழிசை என்பர். இந்தப் பாடல்கள் தில்லையில் பாடப்பட்டவை. பாடல் - எடுத்துக்காட்டு

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற.

விளக்கம்

(மேருமலை) சிவபெருமானின் வில்லாக வளைந்தது. அதனால் பூசல்போர் மூண்டது. அதனால் முப்புரம் என்னும் மூன்று கோட்டைகள் அழிந்தன - என்று சொல்லிக்கொண்டு உந்தீ பற - என்கிறாள் ஒருத்தி.
மூன்று கோட்டைகளும் ஒரே நேரத்தில் பற்றி எரிந்தன - என்று சொல்லிக்கொண்டு உந்தீ பற - என்கிறாள் மற்றொருத்தி.

அடிக்குறிப்பு

[தொகு]