உள்ளடக்கத்துக்குச் செல்

தருமபுர ஆதீன பரம்பரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுர ஆதீன பரம்பரையைத் 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர். இப்பரம்பரை அகச்சந்தான குரவர் மற்றும் புறச்சந்தானக் குரவர் என வகைப்படுத்துவர்.

குருவைக் குறிக்கும் மற்றொரு சொல் குரவர். பொதுவாக குருமார் துறவியர். அவர்களுக்கு மகப்பேறு இல்லை. எனவே அடுத்த குரவரை தலைமைக் குரவரே தேர்ந்தடுப்பார். இப்படித் தத்துப்பிள்ளை போல் தேர்ந்தெடுக்கப்படும் குரவரைச் சந்தான குரவர் என்பர்.

தருமபுர ஆதீன பரம்பரை

அகச் சந்தான குரவர்

[தொகு]

இவர்கள் தொன்மச் சந்தானக் குரவர்கள்

  1. கயிலை நந்தி எம்பெருமான்
  2. சனற்குமார முனிவர்
  3. சத்திய ஞான தரிசனிகள்
  4. பரஞ்சோதி முனிவர்

புறச் சந்தான குரவர்

[தொகு]
குரவர் காலம் கி.பி. இவர் இயற்றிய நூல்
மெய்கண்டார் 1125-1175 சிவஞான போதம்
அருள்நந்தி சிவாசாரியார் 1080-1200 சிவஞான சித்தியார், இருபா இருபது
கடந்தை மறைஞான சம்பந்தர் 1200-1260 சதமணிக் கோவை
உமாபதி சிவாச்சாரியார் 1260-1325 சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. திருத்தொண்டர் புராண சாரம், சேக்கிழார் புராணம், கோயிற்புராணம், திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை முதலியன. இவர் வடமொழியிலும் திறமை பெற்றிருந்ததால், அம் மொழியிலிருந்த பௌஷ்கராகமத்துக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்னும் பெயரில் தெளிவுரையும் எழுதியுள்ளார்

சந்தான குரவர்

[தொகு]
குரவர் காலம் கி.பி. இவர் இயற்றிய நூல்கள்
மச்சுச் செட்டியார் என்னும் அருள் நமச்சிவாயர் 1300-1330 ஞான பூசாகரணம், ஞான பூசாவிதி, ஞான தீட்சா விதி, ஞான அத்தியேட்டி, போசன விதி
காழி - கங்கை மெய்கண்டார் 1325-1335 -
காழி - பழுதை கட்டி - சிற்றம்பல நாடிகள் 1325- 1350 துகளறு போதம் முதலியன
காழி - பழுதை கட்டி சம்பந்த முதலியார் 1350-1375 சிவானந்தமாலை முதலியன
சிவபுரம் ஞானப்பிரகாசர் 1375-1425 -
சிவபுரம் தத்துவப்பிரகாசர் 1425-1475 -
செட்டித்தெரு - பழுதை கட்டி - ஞானப்பிரகாசர் 1475-1525 -
கமலை ஞானப்பிரகாசர் 1525- 1550 சிவபூசை அகவல், பிராசாதமாலை, புட்ப விதி, மழபாடிப் புராணம், தந்திவனப் புராணம் முதலியன
ஸ்ரீ குருஞான சம்பந்தர் 1550-1575 சொக்கநாதக் கலித்துறை, சொக்கநாத வெண்பா, ஞானப் பிரகாச மாலை, நவரத்தின மாலை, திரிபதார்த்த அகவல், பிராசாத சட்கம், சிவபோக சாரம், ஞானாவரண விளக்கம் முதலியன

இதனையும் காண்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுர_ஆதீன_பரம்பரை&oldid=3495008" இலிருந்து மீள்விக்கப்பட்டது